பக்கம்:மதன கல்யாணி-2.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 மதன கல்யாணி

தாள் ஆதலால், அந்தப் படலைக் கண்டுபிடிப்பது அவனுக்குச் சுலபமாக இருந்தது.

உடனே மதனகோபாலன் அந்தப் படலைத் தள்ளித் திறந்து கொண்டு, மெல்ல உள்ளே நுழைந்து, கண்மணியம்மாளது கடிதத்தில் குறிக்கப்பட்ட ஆலமரத்தை நோக்கி விரைவாக நடந்தான். அது மரங்கள் அடர்ந்த பூஞ்சோலை ஆதலால், அதற்குள் இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. அப்படியிருந்தும், அவன் அதற்கு முன் இரண்டொரு முறை அந்தச் சோலைக்குள் சென்று சுற்றிப் பார்த்திருந்தவன் ஆதலால், அவன் அதிகமாகத் துன்பப்படவில்லை.

அவ்வாறு அவன் தங்களது பங்களாவிற்குள்ளேயே திருட்டு வழியால் நுழைந்ததைக் கண்ட துரைராஜா மிகுந்த வியப்பும் திகைப்பும் அடைந்தவனாய், இரண்டொரு விநாடி நேரம் சென்று ஒன்றுந் தோன்றாதவனாய் அசைவற்று நின்று, மதனகோபாலன் அவ்வாறு தங்களது ஜாகைக்குள் நுழைந்த காரணம் என்ன என்பதைப் பற்றி யோசிக்கலானான். அவன் ஏதேனும் பொருளைத் திருடும் பொருட்டு வந்திருக்க மாட்டான் என்ற நினை வு உண்டாயிற்று. ஆகவே, அவன் திருட்டுத்தனமாகக் கண்மணி யம்மாளைக் கண்டு, அவளை வஞ்சித்து அழைத்துக் கொண்டு போய்விட நினைத்தே, அவ்வாறு வந்திருக்கிறான் என்ற சந்தேகம் தோன்றியது. கோமளேசுவரன் பேட்டையில், பொன்னுசாமி நாயகர் கூறிய வரலாறும் அப்போது நினைவிற்கு வந்தது. மதனகோபாலன் வேறொரு பெண்ணைக் கொணர்ந்து ஒளித்து வைத்திருப்பதைப் போல, கண்மணியம்மாளையும் கொண்டு போய்க் கெடுத்துவிட எண்ணியே அவன் அவ்வாறு வந்திருக்கிறான் என்று துரைராஜா உறுதியாக நினைத்துக் கொண்டான். ஆகவே, அவன் மதனகோபாலன் மீது கொண்டிருந்த பகைமையும் ஆத்திரமும் முன்னிலும் பன்மடங்கு அதிகரித்தன. அவனது மோசத்திற்குத் தக்கபடி அவனைத் தண்டிக்க வேண்டியது அவசியமானதென்றும், அதற்கு நல்ல சந்தர்ப்பம் வாய்த்ததென்றும் நினைத்துக் கொண்ட துரைராஜா உடனே ஒருவிதமான தீர்மானம் செய்து கொண்டான். தங்களது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/102&oldid=645828" இலிருந்து மீள்விக்கப்பட்டது