பக்கம்:மதன கல்யாணி-2.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 மதன கல்யாணி

நிச்சயதாம்பூல முகூர்த்தத்துக்கு அழைத்துவிட்டு வந்தார்கள்; ஆனால் கல்யாணியம்மாள் அவர்கள் அன்றிரவு யாரோ சிலரை அழைக்கும் பொருட்டு ஆலந்துருக்குப் போய்த் திரும்புகையில் திருடர்கள் வழிமறித்து அவர்களை அடித்து சொத்துகளைக் கொண்டு போய் விட்டார்களாம்; அதன் சம்பந்தமாக அன்றிரவு முழுதும் போலீஸ் ஸ்டேஷன் முதலிய இடங்களுக்குப் போய் அலைந்து திரிந்துவிட்டு மறுநாள் காலையில் தமது ஜாகைக்கு வந்தார்கள். அதனால் ஏற்பட்ட தேக அசெளக்கியத்தினால் அவர்கள் அந்த நிச்சயதாம்பூல முகூர்த்தத்தை மாற்றி இன்றைய இரவுக்கு வைத்துக் கொண்டார்கள். ஆனால் இன்னமும் அவர்களுடைய உடம்பு அசெளக்கியமாக இருப்பதால் இன்றைக்கும் அது நிறைவேறாமல் வைக்கப்பட்டிருக்கிறது. அவர் களுடைய பெண்களுக்கும் சேர்த்து மூன்று கலியாணங்களையும் அதிசீக்கிரத்தில் மாரமங்கலம் அரண்மனையில் நடத்த வேண்டும் என்று அவர்கள் உத்தேசிப்பதாக இன்று அத்தையம்மாளுக்குக் கடிதம் வந்ததாம்; இந்த விஷயத்தில் என்னுடைய அபிப்பிராயம் இன்னதென்பதை நான் உங்களிடத்தில் முன்னமேயே தெரிவித்தேன் அல்லவா; அதையே உறுதியாக வைத்துக் கொண்டிருக்கிறேன். என்னை அவர்கள் நிச்சயதாம்பூல முகூர்த்தத் துக்காக அலங்காரம் செய்து அழைத்துக் கொண்டு போகும் முன் நான் மாடியிலிருந்து கீழே விழுந்து என்னுடைய உயிரை விட்டு விடத் தீர்மானித்து விட்டேன். அன்றைய தினம் இந்த முகூர்த்தம் ஒத்தி வைக்கப்படாமல் இருந்தால் நான் இந்நேரம் போன இடத்தில் புல்முளைத்துப் போயிருக்கும்; இன்று காலையில் அவர்களுடைய கடிதம் வருகிற வரையில் நான் இன்றிரவு உயிரை விட்டுவிட வேண்டும் என்ற முடிவையே உறுதியாக வைத்திருந்தேன். இப்போதும் நான் அந்த உறுதியை மாற்றிவிடவில்லை. ஆனால் அவர்கள் முகூர்த்தத்தை ஒத்தி வைத்திருப்பதைப் போல, நானும் என்னுடைய மரணத்தை சில நாள்கள் ஒத்தி வைத்திருக்கிறேன். அந்த விஷயத்தில் நான் உங்களுக்கு எவ்வித சிரமமும் கொடுக்க நினைக்கவில்லை. நான் எப்படியும் என்னுடைய உயிரை விடுவதே அத்தியாவசியமானதாக ஆகிவிட்டதாகையால், என்னை அந்த அகால மரணத்திலிருந்து தப்பவைக்கக் கூடிய மனிதர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/106&oldid=645835" இலிருந்து மீள்விக்கப்பட்டது