பக்கம்:மதன கல்யாணி-2.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i G4 மதன கல்யாணி

விடுவதாகச் சொல்லும் வார்த்தைகள், பழுக்கக் காய்ந்த சலாகைகள் போல என்னுடைய காதுகளையும் மனசையும் துளைத்துப் புண் படுத்திவிட்டன. நீ நல்ல விவேகியாக இருந்தும், இப்படி அதைரியப்படலாமா? மனிதன் தன்னுடைய இஷ்டப்படி உயிரை விடுவது சுலபமான காரியமாக இருந்தால், பிறந்த முதல் தரித்திரத்திலும், துயரத்திலும், துன்பங்களிலும் இருந்துழலும் எத்தனையோ கோடி ஜனங்கள், தங்களுடைய கஷ்டங்களைச் சுலபமாக நிவர்த்தித்துக் கொண்டிருப்பார்களே! அது எளிய காரியமல்ல. மனிதன் தனக்குத் தானே அந்தக் காரியத்தை முடிப்பது ஒருநாளும் பலியாத காரியம். ஆகையால் அந்த நினைவை விட்டுவிடு; நான் அன்றைய தினம் சொன்னபடி, அடுத்த நிமிஷத்தில் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது; இந்த நிச்சயதாம்பூல முகூர்த்தத்தை நடத்துவதற்கு இவர்கள் இரண்டு நாட்கள் குறித்தார்களே; அது நிறைவேறியதா பார்த்தாயா? இதிலிருந்தே கடவுள் உன்னுடைய பட்சத்தில் இருக்கிறார் என்பது நிச்சயமாகத் தெரிகிறது. உன்னை மீளாத் துன்பத்தில் ஆழ்த்தக்கூடிய இந்தக் கலியாணத்தை கடவுள் ஒரு நாளும் நிறைவேற்றி வைக்க மாட்டார். உன்னுடைய பெரிய தகப்பனாரான கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாரை நான் சமீபகாலத்தில் கண்டேன்; அந்த மைனருக்கு உன்னைக் கட்டிக்கொடுப்பது அவருக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. நீ வேறு ஒருவரைக் கலியாணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகச் சொன்னாய் அல்லவா? அந்த மனிதர் யார் என்பதை அறிந்து கொண்டு வந்தால், அந்தப்படி கலியாணத்தை தாம் நிறைவேற்றி வைக்க ஏற்பாடு செய்வதாக அவர்கள் உன்னிடம் தெரிவிக்கச் சொன்ன தன்றி, இந்த விஷயத்தில் நீ அதைரியப்படாமல் இருக்கும்படியும் கேட்டுக்கொள்ளச் சொன்னார்கள்” என்று மிகுந்த அன்போடு கூறினான்.

அதைக் கேட்ட கண்மணியம்மாள் மிகுந்த வியப்பும் சஞ்சலமும் அடைந்தவளாய், “அப்படியா அவர்கள் எங்களை எல்லாம் கவனிக்க மாட்டார்கள் என்றல்லவா நான் நினைத்திருந்தேன். இந்த விவரம் எல்லாம் அவர்கள் வரையில் எட்டியிருக்கிறதா இது ஆச்சரியமாக இருக்கிறதே!” என்றாள். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/108&oldid=645838" இலிருந்து மீள்விக்கப்பட்டது