பக்கம்:மதன கல்யாணி-2.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iO3 மதன கல்யாணி

சுத்தப் பொய்யாகத்தான் இருக்க வேண்டும் என்று என் மனசு உறுதியாக நினைத்ததாயினும், அவர்கள் சொன்ன உறுதியில் இருந்து ஒருவகையான சந்தேகம் மாத்திரம் இருந்தது. இப்போது என் மனம் முழுதும் திருப்தி அடைந்துவிட்டது. இருந்தாலும், நீங்கள் இப்படிப்பட்ட அவதூறுக்கு ஆளான விவரம் என்ன என்பதைச் சொல்லலாமானால், அதையும் தெரிந்து கொள்ளு கிறேன்” என்றாள்.

மதனகோபாலன் சிறிது தயங்கி, கல்யாணியம்மாள், தன் விஷயத்தில் அபாண்டமான அவதூறை வெளியிட்டிருந்தாலும், தான் அவளைக் காட்டிக் கொடுக்கக் கூடாதென்ற தயாளமான எண்ணங் கொண்டவனாய், “எனக்கு இந்த அவதூறு ஏற்பட்டது என்னுடைய முன் ஜென்ம கர்மத்தினால் என்றே நினைக்கிறேன்; அவர்கள் மேலும் குற்றமில்லை. அன்றைய தினம் இங்கே எனக்கு ஏற்பட்ட அவமானத்தினால் என் மனசு சரியான நிலையில் இல்லாது போனபடியால், நான் அன்று முழுதும் பைத்தியம் பிடித்தவனைப் போல புத்தி மாறாட்டம் அடைந்திருந்தேன். அந்த நிலைமையில், நான் அவர்களுடைய பங்களாவுக்குப் போய் பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டு வெளியில் வரும் போது நான் இதே நினைவாக வந்தேன் ஆகையால் ஏதோ மறதியால், வழி தவறிப் போய்விட்டது. தற்செயலாக நான் கல்யாணியம்மாள் அவர்களுடைய அந்தப்புரத்துக்குள் நுழைந்து விட்டேன். அவர்கள் தலை நோவென்று அதற்கு முன்னாகவே போய் கட்டிலில் படுத்திருந்தார்கள். அவர்களைக் கண்டவுடன், நான் என்னுடைய தவறை உணர்ந்து, உடனே அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு திரும்பி வெளியில் போக முயன்றேன். என் மனசின் சங்கடமான நிலைமை அவர்களுக்குத் தெரியாதல்லவா? அதனால் அவர்கள், என் வார்த்தையை அவ்வளவாக நம்பாமல், தமக்கருகில் வரும்படி அழைத்தார்கள்; நான் அப்படியே போய், எனக்கு உடம்பு அசெளக்கியமாக இருப்பதால், மனம் குழம்பிப் போய் அங்கே வந்துவிட்டதாகவும், நான் உடனே வீட்டுக்குப் போய்ப் படுத்துக்கொள்ள வேண்டும் என்றும் சொன்னேன். அவர்கள் என் விஷயத்தில், அபாரமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/110&oldid=645844" இலிருந்து மீள்விக்கப்பட்டது