பக்கம்:மதன கல்யாணி-2.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 107

அன்பு வைத்திருப்பவர்கள் ஆதலால், என் விஷயத்தில் மிகவும் இரக்கங் கொண்டு, ஒரு சோபாவில் உட்கார்ந்து கொள்ளச் சொன்னார்கள். காப்பி வரவழைத்துத் தருவதாகவும், வண்டியில் அனுப்புவதாகவும், அவர்கள் எனக்கு உபசரணை புரிந்ததன்றி, அங்கே அரை நாழிகை நேரமாவது இருந்து சிரம பரிகாரம் செய்து கொண்டு போகலாம் என்று சொன்னார்கள். எனக்கு அங்கே ஏற்பட்ட அவமானத்தினால், நான் பைத்தியம் பிடித்தவனைப் போல இருந்தேன் ஆகையால், அவர்களுடைய உபசரணைகள் என் மனசில் படவே இல்லை. அதோடு, எனக்கு இங்கே நேர்ந்த விபத்தைப் போல அங்கேயும் ஏதேனும் பெருந்துன்பம் சம்பவிக்கப் போகிறதே என்ற பெரும்பிதி என்னைத் தூண்டிக் கொண்டிருந்தது ஆகையால், நான் அவர்கள் சொன்னபடி செய்ய மறுத்து பிடிவாதம் பிடித்து, அங்கே இருந்து நான் வெளியில் வர முயன்றேன். அவர்கள் என்னை ஒரு குழந்தையைப் போல மதித்து கரைகடந்த அன்போடு என்னைக் கடிந்து, ஒருவித உரிமை பாராட்டி, போக வேண்டாம் என்று என்னைத் தடுத்தார்கள். நான் அதைக் கேளாமல் வாசலை நோக்கி வர, அவர்கள் நிற்கும்படி சொல்லிக் கொண்டே பின்னால் துரத்திக் கொண்டு வந்தார்கள். அப்போது இன்னொரு வாசலின் வழியாக யாரோ சிலர் அந்த அந்தப்புரத்துக்குள் வந்தார்கள். அநேகமாக அவர்கள் அவர்களு டைய பெண்களாகத் தான் இருக்க வேண்டும். நான் அதற்குள் வெளியில் வந்துவிட்டேன். உள்ளே வந்த பெண்கள் தம்மைப் பார்த்து ஏதேனும் கெடுதலாக நினைக்கப் போகிறார்களே என்ற எண்ணத்தினால், அவர்கள் என்மேல் இப்படிப்பட்ட அவதுறைக் கட்டுப்பாடாகச் சொல்லியிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதற்கு நானே காரணமானவன். என்மேல் அளவற்ற அபிமானத்தோடு, அவர்கள் உபசரணை புரிந்ததை மறுத்து நான் ஒடி அவர்களைப் பற்றி பிறர் சந்தேகிக்கும்படியான நிலைமைக்கு அவர்களைக் கொண்டு வந்தவன் நானே. ஆகையால், இந்த விஷயத்தில், நான் அவர்களிடத்தில், மனப்பூர்வ மாக எவ்வித துராசையும் கொள்ளவில்லை என்பது சத்தியமான சங்கதியானாலும், அவர்களுடைய கற்பைப்பற்றி அயலார் சந்தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/111&oldid=645845" இலிருந்து மீள்விக்கப்பட்டது