பக்கம்:மதன கல்யாணி-2.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 109

மேலான குணத்தையும் தயாள நினைவையும் கண்டு, கரைகடந்த சந்தோஷ சாகரத்தில் ஆழ்ந்தவளாய் மெய்ம்மறந்து, இரண்டொரு விநாடி நேரம் நின்ற பிறகு, “சரி; இப்போதே என் மனம் குளிர்ந்தது; இனி நான் இறந்தாலும், என் ஜீவன் சாந்தி அடைந்துவிடும். எனக்கு நேரமாகிறது, நான் போய்விட்டு வருகிறேன்” என்றாள். அதைக் கேட்ட மதனகோபாலன், “குழந்தாய் உன்னுடைய பெரிய தகப்பனார் அறிந்து கொண்டுவரச் சொன்ன ஒரு விஷயம் மிகுதி இருக்கிறது. அதை மாத்திரம் நீ சொல்வாயானால், நான் போய்விட்டு வருகிறேன்” என்றான்.

அவன் அவ்வாறு பேசிய சமயத்தில் சிறிது துரத்தில், ஒரு விதமான ஓசை உண்டானதாகத் தோன்றியது; அதைக் கேட்ட கண்மணியம்மாளும், மதனகோபாலனும் மருண்டு திரும்பி நாற் புறங்களையும் உற்று நோக்கினர். ஆனால், அது இன்னதென்பது விளங்கவில்லை. மதனகோபாலன் மிகுந்த பதைப்போடு, “நாம் இனி இங்கே நிற்பது சரியல்ல; நீ யாரோ ஒரு புருஷரைக் கலியாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறதாகச் சொன்னாயே; அவர் யார் என்பதை மாத்திரம் ஒரு குறிப்பாகச் சொல்லிவிட்டு, நீ போ!’ என்றான்.

அந்தச் சமயத்தில், அவர்கள் இருந்த இடத்திற்குச் சிறிது துரத்திற்கு அப்பால் மனித உருவங்கள் வந்ததாகத் தோன்றிய தன்றி, அவர்கள் நடந்ததால் உண்டான ஓசையும் கேட்டது. அதை உணர்ந்த இருவரும் பெரும்பிதி அடைந்தவர்களாய், அதற்கு மேல் ஒருவருக்கொருவர் வாய்திறந்து பேசமாட்டாமல் திகைத்து, அவர்கள் யாவரோ என்ற ஐயமும் அச்சமும் கொண்டனர். உடனே மதனகோபாலன், “குழந்தாய்! நீ நிற்க வேண்டாம்: விசையாகப் போய்விடு!” என்று பதைபதைப்போடு கூற, கண்மணியம்மாள் ஒட்டமாக ஓடி மரங்களின் இடையில் புகுந்து பங்களாவை நோக்கிச் சென்று மறைந்து போனாள்; அங்கே வந்தவர்கள் ஒருகால் திருடர்களாக இருப்பரோ என்று ஐயமுற்ற மதனகோபாலன், தான் என்ன செய்வதென்பதை அறிய மாட்டாமல், இரண்டொரு விநாடி நேரம் நின்ற பிறகு, அந்த ஆலமரத்தின் அடிக்கட்டைக்கு அப்புறத்தில் தான் மறைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/113&oldid=645848" இலிருந்து மீள்விக்கப்பட்டது