பக்கம்:மதன கல்யாணி-2.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 40 மதன கல்யாணி

கொண்டால், அவர்கள் போன பிறகு, தான் வெளியில் போய் விடலாம் என்று நினைத்தவனாய் விசையாகப் பாய்ந்து, ஆலமரத்தின் அப்பால் போய் மறைய, அதற்குள் “திருடன் திருடன் ஒடுகிறான் மறைகிறான் விடாதே பிடி பிடி” என்ற கூக்குரல் நிரம்பவும் சமீபத்தில் கேட்டது. நாலைந்து மனிதர் பல திக்குகளிலும் வளைத்துக் கொள்ளும் எண்ணத்தோடு பிரிந்து மூலைக்கொருவராக ஓடினர்; “இதோ ஒடுகிறான்; அதோ ஒடுகிறான்; சீக்கிரமாக வாருங்கள் சீக்கிரமாக வாருங்கள்” என்று சொல்லிக் கொண்டே ஆலமரத்திற்கு அப்பால் ஓடிவந்த துரை ராஜா கையில் பிடித்திருந்த ரிவால்வரின் விசையை அழுத்தி, மதன கோபாலனது காலைப் பார்த்து சுட்டுவிட்டான், ரிவால்வரின் ஒசை உண்டாகும் முன் மதனகோபாலன், “அப்பாடா!” என்று வீரிட்ட கதறலோடு படேரென்று கீழே விழுந்தான். யாரோ ஒருவன் வீழ்ந்தான் என்பதை உணர்ந்தவுடனே போலீஸ் ஜெவான்கள் நால்வரும் அந்த இடத்திற்கு வந்து மரத்தைச் சூழ்ந்து கொண்டனர்.


18-வது அதிகாரம்

விபரீதக் காட்சி அன்று காலையில் துரைஸானியம்மாள், மோகனரங்கனிடத்தில் நடந்து கொண்டதான விபரீதக் காட்சியைக் கண்ட பிறகு, கல்யாணியம்மாளுக்கு உண்மையிலேயே ஜூரம் ஏற்பட்டு விட்டது. தான் எழுந்து போஜனம் செய்ய வேண்டும் என்ற நினைவையும் கொள்ளாதவளாய், கல்யாணியம்மாள் கரைகடந்த துயரக்கடலில் ஆழ்ந்து கிடந்தாள். மைனர் பாலாம்பாளுக்கு எழுதிக் கொடுத்திருந்த பத்திரத்தை தான் ரஜிஸ்டர் செய்து கொடுத்து விடுவதாக பயமுறுத்திப் போன விஷயம் அப்போது கல்யாணியம்மாளுக்கு அவ்வளவு பெரிதாகத் தோன்றவில்லை. மதனகோபாலனால் தனக்கு ஏற்பட்டுள்ள விபத்தைக் காட்டிலும், துரைஸானியம்மாளது விஷயமே மகா பயங்கரமானதாக இருந்தது. தான் மனப்பூர்வமாகக் கெட்ட வழியில் செல்பவளன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/114&oldid=645849" இலிருந்து மீள்விக்கப்பட்டது