பக்கம்:மதன கல்யாணி-2.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 111

ஆதலால், தனக்கு நேர்ந்துள்ள விபத்து தற்செயலாக ஏற்பட்ட தென்றும், துரைஸானியம்மாள் வேண்டும் என்றே துன்மார்க் கத்தில் இறங்கியிருப்பதால், அவளை ஆரம்பத்திலேயே சீர் திருத்தாவிட்டால் அவள் தனது ஆயுட்காலம் வரையில் கெட்டுப் போவதுமன்றி, அதனால் தங்களது குடும்பத்திற்கு என்றென் றைக்கும் நீங்காத இழிவும் நிந்தனையும் உண்டாகும் என்று நினைத்த கல்யாணியம்மாள், அவளை நல்வழிப்படுத்ததான் என்ன தந்திரம் செய்யலாம் என்று சிந்தனை செய்தவளாகப் படுத்திருந்தாள். இடையில், வேலைக்காரிகள் வற்புறுத்தியதைக் கருதி ஏதோ சொற்பமான பத்திய ஆகாரம் உட்கொண்டு ததேவத்தியானமாகப் படுத்திருந்தாள்.

அவ்வாறு பிற்பகல் மூன்று மணி சமயம் வரையில் சயனித் திருந்த அந்த அம்மாள் ஏதோ ஒருவகையான முடிவு செய்து கொண்டு, தனது சயனத்தை விட்டெழுந்து சிறிது நேரம் உலாவ விட்டு பக்கத்தில் கிடந்த மேஜைக்கருகில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து, ஒரு காகிதத்தை எடுத்து அதில் அடியில் வருமாறு எழுதலானாள்:

படித்தவுடன் கிழித்து விடவும்

மகா-ா-ா-ஸ்ரீ, மகாகனம் பொருந்திய முதலியார் அவர்களுக்கு கல்யாணியம்மாள் நமஸ்காரம் செய்து எழுதும் விக்ஞாபனம்; நேற்று நீங்கள் சொன்ன யோசனைப்படியே, நான் இன்று காலையில் மீனாகூஜியம்மாள் அவர்களுக்குக் கடிதம் எழுதி அனுப்பி விட்டேன். அவர்கள் அதைப்பற்றி ஆயாசப்படாமல், அதற்கு இணங்கிவிட்டார்கள். நாம் நம்முடைய இரண்டு பெண் குழந்தைகளின் கலியாணத்தை அதிக துரிதமாக முடிவுகட்டிவிட வேண்டியது முதல் காரியமாக இருக்கிறது. பையனுடைய விஷயத்தையும் நாம் நேற்று யோசித்தபடியே செய்துவிடத் தீர்மானித்து, அதற்குத் தகுந்த மனிஷ்யாளுக்கு ஆள் அனுப்பி இருக்கிறேன். அந்த மனுஷ்யாள் இன்று ராத்திரி வந்து சேருவார்கள். அவர்களைக் கொண்டு அந்த வில்லங்கத்தையும் முடிவாகத் தீர்த்துக்கொண்டால், என்னுடைய கவலைகளிலும்

ம.க.Ai-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/115&oldid=645850" இலிருந்து மீள்விக்கப்பட்டது