பக்கம்:மதன கல்யாணி-2.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 மதன கல்யாணி

துன்பங்களிலும் முக்காலே அரைக்கால் பாகம் நிவர்த்தியாகிவிடும். அதன் பிறகு நான், இந்தப் பீடைபிடித்த பட்டணத்தின் முகத்தி லேயே விழிக்காமல், மாரமங்கலம் போய்ச் சேர்ந்து, அதிசீக்கிரத் தில் மூன்று கலியாணங்களையும் நடத்தி வைத்துவிட வேண்டும் என்று பரிபூரணமான நம்பிக்கை கொண்டிருக்கிறேன். அதற்கு ஈசன் அருளும், என் எஜமானருடைய ஆசீர்வாதமும் ஏற்பட வேண்டுமாய் நான் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன். நான் இத்தனை வருஷ காலம் எவ்விதத் துன்பமுமின்றி இருந்து வந்து விட்டேன். இப்போது சில மாசகாலமாக, நான் நரக வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். நான் காலை வைத்த இடத்தில் எல்லாம், புதிய விபத்துகளும் விபரீதங்களும் கிளம்பி என்னை எதிர்க்கின்றன. இவகைள் எல்லாம், சூரியன் முன் இருளென நீங்கும் காலம் வருமோ வராதோ என்ற ஏக்கமே என்னுடைய உயிரைக் குடித்துக் கொண்டிருக்கிறது.

நிற்க, இன்னொரு முக்கியமான விஷயம். நீங்கள், அநாதைப் பையன் என்ற இரக்கங்கொண்டு, நமது பங்களாவில் குமாஸ்தா வேலையில் கொண்டு வந்து வைத்த மோகனரங்கன் என்னும் பையன், பெண் பிள்ளையைப் போல வசீகரமான தோற்றத்தைக் கொண்டிருப்பதால், அவன் விஷயத்தில், துரைஸ்ானியம்மா ளுடைய மனசு ஒரு மாதிரி பேதித்திருப்பதாக நான் சந்தேகப்படக் கூடிய சில சூசனைகள் என் கண்ணில் பட்டன. நம்முடைய குழந்தை நல்ல பருவத்துப் பெண்ணாகவும் அறியாத குழந்தை யாகவும் இருப்பதாலும், இப்படிப்பட்ட மனிதர்கள் அவளுடைய கண்ணில் படாமல், இன்னம் சொற்ப காலம் வரையில் நாம் காப்பாற்றி அவளை ஒருவரிடம் கட்டிக்கொடுத்து விட்டால், அதோடு நம்முடைய பொறுப்பும் தீர்ந்து போகும். ஆகையால், அந்தப் பையனிடத்திலேயே, நான் இந்தக் கடிதத்தைக் கொடுத்து, அவனை உங்களிடம் அனுப்பி இருக்கிறேன். அவன் இனி இந்த பங்களாவுக்கே திரும்பி வராதபடி, அவனை நீங்கள் வேறே எவ்விடத்திலாவது வேலைக்கு அமர்த்திவிட வேண்டும்; ஆனால் இவர்களைப் பற்றி நாம் சந்தேகிக்கிறோம் என்பதை இவனாவது, நம்முடைய குழந்தை துரைஸானியம்மாளாவது கண்டுகொள்ளத படி பக்குவமாக, நீங்கள் எனக்கு இந்த உதவியை அவசியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/116&oldid=645851" இலிருந்து மீள்விக்கப்பட்டது