பக்கம்:மதன கல்யாணி-2.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 117

திருப்பிக் கொண்டு விரைவாகத் தனது ஆடைகளைச்சரிப்படுத்திக் கொண்டாள். தான் செய்த காரியத்தைத் தனது தாய் கண்டு கொண்டாள் என்ற நினைவும், பெரும் பீதியும், கோழைத்தனமும் எழுந்து அவளது உற்சாகத்தையும் துணிவையும் துடுக்கையும் அடக்கித் தரைமட்டமாக்கின. அவள் கோமளவல்லியிடத்தில் தனது தாயின் நடத்தையைப் பற்றி எவ்வளவு தான் தூற்றி, அவளைப்பற்றி அவமதிப்பாகப் பேசியிருந்தாலும், அவளிடத்தில் நேருக்கு நேர் அவ்வளவு அதிக அவமரியாதையாக நடந்து பழகின வளன்று ஆதலால், அவள் இரண்டொரு நிமிஷ நேரம் கலகலத்துப் போய் நின்று விட்டாள். கற்பை இழப்பதே, பெண்மக்கள் செய்யக் கூடிய பிழைகளில் எல்லாம் கொடிதினும் கொடிதான குற்றம் ஆதலால், அதை, கையுமெய்யுமாகப் பிறர் கண்டு கொள்வதென்றால், அப்படிப்பட்ட பெண்மக்கள் எவராயிருந் தாலும் நடுக்கமும் கலக்கமும் கொள்வது இயற்கை ஆதலால், அப்போதே முதன் முதலாக அந்தப் பெருத்த குற்றத்தைச் செய்த துரைஸானியம்மாள், அதை நேரில் பார்த்துவிட்ட தனது தாயைக் கண்டு, எவ்வளவு தூரம் அஞ்சி நடுங்கி ஒடுங்கிப் போவாள் என்பது கூறாமலேயே விளங்கும்.

அவளுக்கருகில் மிகவும் விரைவாக வந்த கல்யாணியம்மாள், தனது இரண்டு கைகளையும் கொடுத்து, கீழே கவிழ்ந்திருந்த துரை ஸ்ானியம்மாளது முகத்தை நிமிர்த்தி இறுகப் பிடித்துக் கொண்டு, கோபமும் அன்பும் விசனமும் இரக்கமும் தோன்றிய பார்வையாக அவளைப் பார்த்து, “குழந்தாய்! நீ இதுவரையில் என்னோடு எதிர்த்துப் பேசி ஆத்திரமுண்டாக்கிய காலங்களில் எல்லாம், நாம் பெற்ற குழந்தைதானே பேசுகிறது. அது குழந்தையாக இருக்கையில், வேடிக்கையாக நம்மைத் திட்டிய போது, அதைக் கேட்டு ஆனந்தப்படவில்லையா இப்போது மாத்திரம் நாம் ஏன் ஆத்திரப்பட வேண்டும் என்று நான் என் மனசையே கண்டித்து, உன்னுடைய குற்றங்களை எல்லாம் பாராட்டாமல், நான் வைத்த வாத்சல்யத்தைக் குறைக்காமலேயே இருந்து வந்தேன். ஆனால், நீ இப்போது செய்த காரியத்தைக் கண்டும், நான் உன்னைக் கண்டிக்காமல், இதைப்பற்றி சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. நான் வேறே எதைப் பொறுத்தாலும் பொறுப்பேன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/121&oldid=645858" இலிருந்து மீள்விக்கப்பட்டது