பக்கம்:மதன கல்யாணி-2.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 121

வில்லை என்பதைக் கல்யாணியம்மாள் கண்டுகொண்டாள். இருந்தாலும் தனது மூத்த பெண்குழந்தையைக் கொடுமையாக நடத்த அவளது இளகிய மனம் இடந்தரவில்லை. ஆகவே, அந்த அம்மாள் கம்பீரமாக நிமிர்ந்து துரைஸானியைப் பார்த்து, “இந்தா! துரைஸானி நீ இன்னமும் எனக்கு அடங்கி நடக்க வேண்டிய நிலைமையிலேயே இருக்கிறாய்; அப்படி இருந்தும், அதை உணராமல், சக்களத்தி இடத்தில் போராடுவதைப் போல, நீ என்னிடத்தில் பேச ஆரம்பிக்கிறாய். அவைகளுக்கெல்லாம் சரியானபடி பதில் சொல்லிக் கொண்டிருக்க எனக்கு இஷ்ட மில்லை; இப்போது நான் முடிவாக ஒரு வார்த்தை சொல்லி விடுகிறேன். நீ அந்தப்படி செய்தே தீரவேண்டும். ஏதோ நீ குழந்தைப் புத்தியால் இந்தத் தவறைச் செய்து விட்டாய்; இதோடு உன்னை அடியோடு கெடுத்துவிட எனக்கு மனமில்லை. இவ்வளவோடு அந்தப் பையனுடைய நினைவை விட்டுவிட்டு, இன்னம் கொஞ்ச காலத்துக்கு ஒழுங்காக இரு. வெகு சீக்கிரத்தில் உன்னை எவனிடத்திலாவது ஒப்புவித்து விடுகிறேன். அதன் பிறகு நீ எப்படியாவது செய்து, சீரழிந்து போ தெரிகிறதா? இனி நீ இங்கே இருக்கிற வரையில், இந்த மாதிரியான துன்மார்க்கத்தில் இறங்கினால், நான் உன்னை மிகவும் கொடுமையாக தண்டிப் பேன்” என்றாள். *

அதைக் கேட்ட துரைஸானியம்மாள், “இந்த மோகனரங்கனைத் தவிர, வேறே எந்த மன்மதன் வந்தாலும், அவனை நான் என் கையாலும் தொடமாட்டேன். என் உயிர் போனாலும் நான் இவனை விட்டுப் பிரிந்திருக்கவே மாட்டேன்” என்று முறுக்காகக் கூறினாள். அதைக் கேட்ட கல்யாணியம்மாள் கரைகடந்த கோபங்கொண்டு, “என்ன சொன்னாய் உனக்கு அவ்வாேவு துணிவு வந்து விட்டதா! வீணாக நல்ல உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதே” என்று அதட்டிக் கூறினாள்.

அதைக் கேட்ட துரைஸாணி, “இந்த உருட்டலுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். இன்று ராத்திரி நான் இந்த வீட்டை விட்டுப் போகத் தீர்மானித்துவிட்டேன்; எனக்கு உங்களுடைய கலியாணமும் வேண்டாம் நகைகளும் வேண்டாம்; பணமும்

வேண்டாம்” என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/125&oldid=645863" இலிருந்து மீள்விக்கப்பட்டது