பக்கம்:மதன கல்யாணி-2.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#22 மதன கல்யாணி

அவள் கூறிய சொற்கள் கல்யாணியம்மாள் பொறுக்கக்கூடிய வரம்பை மீறியனவாகப் போய்விட்டன. அவளது தேகம் மண்ணி லிருந்ததோ விண்ணிலிருந்ததோ என்பது தெரியாமல் தத்தளித்தது கண்களில் தீப்பொறி பறந்தது. கால்களும் கைகளும் வெடவெட வென்று ஆடத் தொடங்கின. அவள் உடனே துரைஸானியம் மாளை நோக்கி, “ஒகோ! நீ இவ்வளவு தூரத்துக்கு வந்துவிட்டாயா! இருக்கட்டும். நீ பெரியவளா அல்லது நான் பெரியவளா என்பதையும் பார்த்துவிடுவோம்” என்று கூறியவண்ணம் மிகவும் முறுக்காக நடந்து வெளியில் போய்விட்டாள்.

உடனே துரைஸானியம்மாள் தனது கட்டிலின் மேல் ஏறிப் படுத்துக் கொண்டு அப்போது நிகழ்ந்த விஷயங்களைப் பற்றி தனக்குத் தானே எண்ணமிடலானாள். - அவ்வாறு ஐந்து நிமிஷ நேரம் கழிந்தது; கல்யாணியம்மாள் மிகுந்த பதைபதைப்போடு திரும்பி வந்து, துரைஸானியம்மாளது அந்தப்புரத்தின் வாசற்கதவை இழுத்து விரைவாக மூடி சங்கிலியை மாட்டி, தனது கையில் வைத்திருந்த ஒரு பெருத்த பூட்டினால் அதைப்பூட்டி, திறவுகோலை ஜாக்கிரதையாக வைத்துக் கொண்டு, பக்கத்திலிருந்த ஜன்னலண்டையில் வந்து, “துரைஸானி உன்னுடைய கலியாணம் ஆகிற வரையில் நீ இந்த அறைக்குள் ளேயே அடைபட்டிரு உன்னுடைய சாப்பாடு முதலிய சகலமான காரியங்களையும் இதற்குள்ளாகவே நடத்திக் கொண்டிரு” என்று சொல்லிவிட்டு, அடக்க ஒண்ணாத ரெளத்திராகாரமான கோபத் தோடு தத்ரூபம் நரசிம்மாவதாரம் போல கர்ச்சித்தவளாய், தனது அந்தப்புரத்தை அடைந்து கட்டிலின்மேல் ஏறி உட்கார்ந்து பெரு மூச்செறியத் தொடங்கினாள்.

அந்தச் சமயத்தில் வேலைக்காரி பதுங்கி ஒதுங்கி உள்ளே நுழைந்து, “அம்மணி மோகனரங்கன் குளத்தங்கரைக்குப் போயிருந்தானாம்; இப்போது தான் வந்தான்; உத்தரவுப்படி அவனை இதோ அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன்” என்றாள். அதே நொடியில் அந்தப் பையனும் உள்ளே நுழைந்து சிறிது துரத்திற்கப்பால் வந்து நின்றான். --.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/126&oldid=645864" இலிருந்து மீள்விக்கப்பட்டது