பக்கம்:மதன கல்யாணி-2.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#24 மதன கல்யாணி

அக்கிரமச் செய்கை வெளியாகாமல், எப்படியாகிலும், அவனை பங்களவை விட்டு அனுப்பு, அவன் மறுபடியும் தங்களிடத்திற்கு வராமல் செய்துவிட்டால் அதுவே போதுமானதென்று தீர்மானித்துக் கொண்ட அந்தச் சீமாட்டி மோகனரங்கனை அன்பாக நோக்கி, “ஏ மோகனரங்கம்! நீ ஒரு காரியம் செய்; இதோ இருக்கும் இந்தக் கடிதம் மிகவும் அவசரமானது. இதை எடுத்துக் கொண்டு, உடனே புறப்பட்டு சீக்கிரமாகப் மைலாப் பூருக்குப் போய் நம்முடைய வக்கீல் ஐயாவிடத்தில் கொடுத்து விட்டு, அவர்கள் பதில் கடிதம் எழுதிக் கொடுத்தால் வாங்கிக் கொண்டு வா; இது ஒரு பெருத்த வியாஜ்ஜிய சம்பந்தமான கடிதம்; ஆகையால், இன்னம் ஒரு மணி நேரத்துக்குள் இது அவர்களிடத்தில் போய்ச் சேர வேண்டும்; தெரிகிறதா?” என்றாள். அதைக் கேட்ட மோகனரங்கன் ஒருவாறு துணிவடைந்தான். அந்த அம்மாள் சொல்லப் போகும் விஷயம் தனக்குச் சம்பந்த மானதாக இருக்குமோ என்று அவன் அதுகாறும் கவலையும் கலக்கமும் கொண்டிருந்தவன் அதலால், தனக்கு சந்பந்தமற்ற அந்த வார்த்தைகளைக் கேட்கவே, அவன் தைரியமாகவும் உற்சாகத்தோடும் நிமிர்ந்து நின்று, சுமுகமாக அந்தச் சீமாட்டியை நோக்கி, “உத்தரவுப்படியே போய்விட்டு வருகிறேன். கடிதத்தைக் கொடுங்கள்” என்று மிகுந்த பரபரப்போடு கேட்க, உடனே கல்யாணியம்மாள் தனது திண்டினடியில் மறைத்து வைத்திருந்த கடிதத்தை எடுத்து, அண்டையில் நின்ற தாதியிடத்தில் கொடுக்க, அவள் அதை மோகனரங்கனிடத்தில் நீட்டினாள். அதைப் பெற்றுக் கொண்ட மோகனரங்கன், “சரி, போகலாமா?” என்று கேட்க, கல்யாணியம்மாள் தனது சிரத்தை அசைக்க, உடனே அந்த அழகிய யெளவனப் புருஷன், நிரம்ப விசையாக நடந்து அந்த அந்தப் புரத்தை விட்டு வெளியில் வந்தான். வந்தவன், நேராகக் கச்சேரி மண்டபத்திற்குப் போய், வேறு உடைகள் அணிந்து கொண்டு, தான் சிவஞான முதலியாரது வீட்டிற்குப் போய்விட்டு வர வேண்டும் என்று இதர குமாஸ்தாக்களிடத்தில் சொல்லி விட்டு, மிகவும் குதுகலமாக அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு மைலாப்பூரை நோக்கி விரைவாக நடக்கலானான். அந்தப் பங்களாவிற்கும், சிவஞான முதலியாரது ஜாகைக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/128&oldid=645866" இலிருந்து மீள்விக்கப்பட்டது