பக்கம்:மதன கல்யாணி-2.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 129

கடிதத்தில் எழுதி இருக்கிறார்களே! அங்கே அவ்வளவு அவசரமான காரியம் என்ன இருக்கிறது?” என்றார்.

அதைக் கேட்ட மோகனரங்கன் அவரது கருத்தை உணராதவ னாகச் சிறிது தயங்கி, “எங்கேயாவது கடிதம் கொண்டு போய்க் கொடுக்க வேண்டியிருக்கும். காலையில்கூட என்னை கிருஷ்ணா புரத்தாருடைய பங்களாவுக்கு கடிதத்தோடு அனுப்பினார்கள். அதைப் போல இன்னம் ஏதாவது அவசரமான காரியமிருக்கும். நான் போகலாமா?” என்றான்.

அதைக் கேட்ட சிவஞான முதலியார் நிதானமாகப் பேசத் தொடங்கி, “இருக்கட்டும் போகலாம் கொஞ்சம் பொறு; உன்னை உடனே இங்கே அழைத்து வரும்படி, இப்போது நானே அந்த பங்களாவுக்கு ஒர் ஆளை அனுப்ப எண்ணி இருந்தேன். தெய்வச் செயலாக நீயே வந்து சேர்ந்தாய், நல்லதாயிற்று; கீழே இருக்கும் வேலைக்காரனைக் கூப்பிடு” என்றார். -

மோகனரங்கன் ஒருவாறு திகைப்படைந்தவனாகக் கீழே இறங்கி, முதலில் வந்த வேலைக்காரனை அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தான். சிவஞான முதலியார் அந்த வேலைக்காரனை நோக்கி, “அடே வேலாயுதம்! இப்போது அவசரமாக மாரமங்கலத் தாருடைய பங்களாவுக்கு அனுப்ப ஓர் ஆள் வேண்டும். உன்னுடைய வீட்டுக்குப் போய் உன் மகனை அழைத்துக் கொண்டுவா!” என்றார். வேலாயுதம் என்ற அந்த வேலைக்காரன் அப்படியே செய்வதாகச் சொல்லிவிட்டு வெளியில் போய் விட்டான். உடனே முதலியார் மோகனரங்கனைப் பார்த்து, “அப்பா மோகனரங்கம்! நான் மாரமங்கலத்தாருக்குச் சொல்லி அனுப்ப வேண்டிய பதிலை அந்தப் பையன் மூலமாகச் சொல்லி அனுப்புகிறேன். உன்னை நான் இப்போது அவசரமாக ஒரிடத்துக்கு அனுப்ப வேண்டும். நீ இரு கடிதம் எழுதித் தருகிறேன்” என்று கூறிய வண்ணம் இறகை எடுத்துக் கொண்டு கடிதங்கள் எழுத ஆரம்பித்தார். அவர் அவ்வாறு எழுதிய போது மோகனரங்கனது மனம் திகைப்பும் சஞ்சலமும் கொள்ளத் தொடங்கியது. சிறிது நேரத்தில் ஆகக்கூடிய காரியத்திற்காக அவர் தன்னை வரவழைக்கக் கூடியவரல்ல ஆதலால், அவர் சில நாட்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/133&oldid=645874" இலிருந்து மீள்விக்கப்பட்டது