பக்கம்:மதன கல்யாணி-2.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் #35

பெரிதும் திகைப்பும் வியப்பும் அச்சமும் கலக்கமும் அடைந்து தாங்கள் என்ன செய்வதென்பதை உணராதவர்களாய் நிற்க, அப்போது அருகில் நெருங்கி வந்த துரைராஜா அப்போதே கீழே பார்ப்பவன் போல மதனகோபாலனை உற்று நோக்கி, “அடாடா! இவனா இங்கே வந்தவன் ஐயோ! பாவம்! இவனை அநியாய மாகச் சுட்டுவிட்டோமே!” என்று கூறி நிரம்பவும் பரிதவிப்பவன் போல நடலம் புரிந்தான். அதைக் கேட்ட போலீசாரது மனம் இன்னமும் அதிகமாகக் கலங்கியது. அவர்களுள் ஒருவன், “இந்த மனிதர் யார்?” என்று துரைராஜாவை நோக்கிக் கேட்க, அவன் பெரிதும் விசனித்தவன் போலக் காண்பித்துக் கொண்டு, “இவன் ஒரு வீணை வித்துவான்; பெரிய இடங்களுக்கெல்லாம் போய் வீணை வாசிக்கக் கற்றுக் கொடுக்கிறவன். இவன் எங்களுடைய பங்களாவுக்குக்கூட வந்து பாடம் சொல்லிக் கொடுத்து வந்தான்; சில நாட்களாக, நாங்கள் இவனை வேண்டாம் என்று நிறுத்தி விட்டோம். அது முதல் இவன் இந்த பங்களாவுக்குள்ளேயே வந்த தில்லை. இன்றைக்கு இப்படித் திருட்டுத் தனமாக ஏன் வந்தான் என்பது தெரியவில்லை. இவன் ஒருநாளும் திருடும் குணமுடைய வனல்லவே! இங்கே ஏன் வந்தான் என்பது தெரியவில்லையே! ஐயோ பாவம் உயிர் இருக்கிறதோ இறந்து போய்விட்டானோ பாருங்கள் என்று மிகுந்த அனுதாபத்தோடு கூற, அதற்குள் ஒரு ஜெவான், மதனகோபாலனது அங்கவஸ்திரத்தை எடுத்து, அவனது காயத்தின் மீது நன்றாகக் கட்டி, மேன்மேலும் இரத்தம் வெளியில் வராமல் தடுத்தான். இன்னொரு ஜெவான், அவனது மார்பையும், கை நாடியையும் தொட்டுப் பார்த்து அவன். இன்னமும் உயிரோடிருப்பதாகக் கூற, உடனே துரைராஜா, “சரி: நாம் இப்போது ஒரு காரியம் செய்வோம். இவனைத் துக்கிக் கொண்டு போய் போலிஸ் ஸ்டேஷனில் வைத்து, ஒரு டாக்டரை அழைத்து வந்து, இவனுக்கு ஆகவேண்டிய சிகிச்சைகளைச் செய்வோம். அதற்குள் இவனுடைய மூர்ச்சை தெளியும். உடனே நாம், இவன் இங்கே எதற்காக வந்தான் என்பதைக் கேட்டறிந்து, உடனே தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்வோம்” என்று கூறினான்.

அதைக் கேட்ட போலிஸ் ஜெவான்கள் அப்படியே செய்வோம் என்று ஒப்புக்கொள்ள, உடனே அவர்களுள் மூவர் முறையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/139&oldid=645883" இலிருந்து மீள்விக்கப்பட்டது