பக்கம்:மதன கல்யாணி-2.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{} மதன கல்யாணி

அதைக் கேட்ட கல்யாணியம்மாள் திரும்பவும் சிந்தனையில் ஆழ்ந்தவளாய் யோசனை செய்து செய்து பார்த்தாள். கிருஷ்ணா புரம் ஜெமீந்தார் தமது கூட்டாளியை, எவ்விதமான அவசர காரியத்தின் பொருட்டு அனுப்பி இருக்கப் போகிறார் என்று நினைத்து நினைத்துப் பார்த்தாள். கண்மணியம்மாளது நிச்சயதாம் பூலம் அன்றைய தினம் நடக்கப் போவதைப் பற்றி கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாருக்கு மீனாகூஜியம்மாள் முதல் நாள் இரவில் தந்தி அனுப்புவதாகச் சொன்னது நினைவிற்கு வந்தது. அந்தத் தந்தி அவருக்குக் கிடைத்திருக்கலாம் என்றும், அவருடைய கூட்டாளி யான இந்த மனிதர் சில நாட்களுக்கு முன்னாகவே, ஏதோ வர்த்தக சம்பந்தமாக, பட்டணத்திற்கு வந்திருக்கலாம் என்றும், இவருக்கு கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் நிச்சயதாம்பூல முகூர்த்த சம்பந்தமாக ஏதேனும் பதில் தந்தி கொடுத்து, தன்னை அவசரமாகப் பார்க்கும் படி கேட்டுக் கொண்டிருக்கலாம் என்றும் கல்யாணியம்மாள் ஒரு வகையான யூகம் செய்து கொண்டாள். இந்த மனிதரை உடனே பார்த்து, விஷயம் இன்னதென்பதை அப்போதே அறிந்து கொள்ளாவிடில், தனக்கு முன்னமேயே ஏற்பட்டுள்ள எண்ணிறந்த வாதைகளுக்குத் துணையாக, இந்த உறுத்தலும் சேர்ந்து தன்னை வருத்திக் கொண்டிருக்கும் என்று நினைத்தவளாய், அவரை உடனே தன்னிடத்திற்கு அழைத்து வரும்படி வேலைக்காரனிடம் உத்தரவு செய்தாள். அவன், திரும்பி வாசலை நோக்கி இரண்டோரடி நடக்க, அதற்குள் கல்யாணியம்மாள் “அடே! நம்முடைய குழந்தைகளை இங்கே அழைத்து வரும்படி இப்போது தான் காமாட்சியை அனுப்பினேன். நீ முதலில் குழந்தைகளுடைய அந்தப்புரத்துக்குப் போய், நான் ஒரு பெரிய மனிதரிடத்தில் பேசிக் கொண்டிருப்பதால் மறுபடியும் நான் சொல்லி அனுப்பிய பிறகு வரலாம் என்று, நான் சொன்னதாகச் சொல்லிவிட்டு நீ, பிற்பாடு வாசலுக்குப் போய் அந்த ஐயாவை அழைத்துக் கொண்டுவா’ என்றாள். அதைக் கேட்ட வேலைக்காரன் அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டு வெளியில் போய்விட்டான்.

துரைஸானியம்மாள் தனது தாயின் நடத்தையைப் பற்றி முதல் நாள் இரவில் இருந்தே பலவகையான சந்தேகங்களைக் கொண்டவளாய் தனது தங்கையின் புத்தியையும் கலைத்துக் கொண்டிருந்தவள் ஆதலால் இப்போது, உடனே வரும்படியாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/14&oldid=645884" இலிருந்து மீள்விக்கப்பட்டது