பக்கம்:மதன கல்யாணி-2.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் i41

உடனே துரைராஜா குறுக்கிட்டு, “ஆம், நீங்கள் சொல்வது நிஜந் தான். இவன் திருட வந்தவனல்ல என்பது நன்றாகத் தெரிந்து விட்டது. ஆகையால், நீங்கள் எவ்வித நடவடிக்கையும் எடுத்துக் கொள்ள வேண்டாம். கடிதத்தை இருந்த இடத்திலேயே வைத்து விடுங்கள். டாக்டர் வந்து சிகிச்சை செய்தவுடனே இவனை வண்டியில் வைத்து நாங்களே கொண்டு போய் இவனுடைய ஜாகையில் விட்டு வந்துவிடுகிறோம்” என்றான்.

அதற்குள் பசவண்ண செட்டியார் சப் இன்ஸ்பெக்டரைப் பார்த்து, “இந்தக் கடிதத்தின் உண்மையை எல்லாம் நான் உள்ள படி தெரிவிக்கிறேன். ஆனால், இவர்கள் யார் என்பது எனக்குத் தெரியவில்லை; தயவு செய்து தெரிவிக்க வேண்டும்” என்று துரை ராஜாவைச் சுட்டிக் காட்டினார். சப் இன்ஸ்பெக்டர், “இவர்க ளுடைய பெயர் துரைராஜா என்பார்கள் கிருஷ்ணாபுரம் ஜெமீந் தாருடைய தம்பி குமாரர்; இந்த வீணை வித்துவான் நுழைந்த பங்களா இவர்களுக்குச் சொந்தமானது” என்றார்.

அதைக் கேட்ட பசவண்ண செட்டியார் நிரம்பவும் சந்தோஷ மடைந்தவர் போல நடித்து துரைராஜாவைப் பார்த்துப் புன்னகை செய்த வண்ணம், “ஒகோ! அப்படியா தாங்கள் தானா துரைராஜா என்பவர்கள்! நான் இன்னான் என்பது தங்களுக்குத் தெரிந்திருக் காது, நான் இருப்பது மைசூர் என்னை பசவண்ண செட்டியார் என்று சொல்லுவார்கள். தங்களுடைய பெரிய தகப்பனார் செய்யும் சந்தனக்கட்டை வர்த்தகத்தில், நான் அவருடைய கூட்டாளியாக இருந்து வருகிறேன். நான் இந்த ஊரிலேயே இருந்து வியாபாரத்தைப் பரவச் செய்யும் எண்ணத்தோடு இங்கே வந்து, இரண்டு தினமாகிறது. தங்களிடத்தில் கொடுக்கும்படியாக, தங்களுடைய பெரிய தகப்பனார் ஒரு கடிதம் கொடுத்தனுப்பி இருக்கிறார்கள். அதை எடுத்துக் கொண்டு நாளைய தினம் தங்களுடைய பங்களாவுக்கு நானே நேரில் வந்து தங்களைக் காணலாம் என்றிருந்தேன். அதற்குள் தெய்வச் செயலாக இப்போதே தங்களைக் காணும்படி நேர்ந்தது நிரம்பவும் சந்தோஷ மாயிற்று” என்று அன்பொழுகப் பேசினார்.

அதைக் கேட்ட துரைராஜா, ஒருவித எச்சரிக்கை அடைந்து மரியாதையாகவும் அன்போடும் பேசத் தொடங்கி, “அப்படியா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/145&oldid=645892" இலிருந்து மீள்விக்கப்பட்டது