பக்கம்:மதன கல்யாணி-2.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 147

துரைராஜா, “நான் எப்போதும் இருப்பேன்; ஆனால், நாளைய தினம், அருமையான சிநேகிதர்களுடைய பங்களாவுக்கு நான் வருகிறேன் என்று சொல்லி இருக்கிறேன்; அங்கே பிற்பகல் மூன்று மணிக்குப் போகும்படியாக இருக்கும்; அதற்கு முன், நீங்கள் எப்போது வந்தாலும், நான் ஆயத்தமாக இருப்பேன்” என்றான். செட்டியார், “சரி, அப்படியானால், நான் போஜனத்தை முடித்துக் கொண்டு பகல் ஒரு மணிக்கு அங்கே வந்து சேருகிறேன்” என்றார்.

துரைராஜா, “ஏன் போஜனத்துக்கே அங்கே வந்துவிடக் கூடாதா?” என்று புன்சிரிப்போடு நயமாகக் கேட்க செட்டியார், “போஜனத்துக்கென்ன? நான் சாப்பிடுவதெல்லாம் யாருடைய போஜனம்? எல்லாம் உங்களுடைய பெரிய தகப்பனாருடையது தானே! அவருடையதெல்லாம் உங்களுடையதல்லவா? நான் இந்த ஊரிலேயே வந்து தங்கப் போகிறேனே அப்போது, நான் உங்களைத்தான் என்னுடைய முக்கிய நண்பராக வைத்துக் கொள்ளப்போகிறேன். அப்போது போடுங்களேன் போஜனத்தை எல்லாம்; நான் வயிற்றுப் போஜனத்தோடு திருப்தி அடைகிற வனல்ல. எனக்கு சங்கீதம் முதலிய சகலமான விஷயங்களிலும் ஆசை அதிகம். என்னிடத்தில் எடுக்க எடுக்க மாளாத அளவற்ற சொத்து இருக்கிறது, அதையெல்லாம் செலவழித்து பட்டணத்தில் உள்ள சுகங்களை எல்லாம் அனுபவித்துவிட வேண்டும். அதற்காகவே, நான் இங்கே தனியாக வியாபாரம் செய்வதாக உங்களுடைய பெரிய தகப்பனாரிடத்தில் அனுமதி பெற்றுக் கொண்டு வந்துவிட்டேன். நீங்கள்தான் எனக்கு எல்லா விஷயங் களுக்கும் வழிகாட்டியாக இருந்து, நீங்களும் என்னோடு சுகங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டும்” என்றார்.

எதிர்பாராத அந்த வார்த்தைகளைக் கேட்ட துரைராஜா கரை கடந்த சந்தோஷமடைந்தவனாய், நல்ல கறவைப் பசு தனது வலையில் வந்து வீழ்ந்து விட்டதென்று நினைத்தவனாய், அவரது பொருளைக் கொண்டு தான் சகலமான சுகபோகங் களையும் அனுபவித்துவிட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு, “சரி; நான் எந்த விஷயத்திலும் உங்களுடைய பிரியப்படி நடக்கத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/151&oldid=645902" இலிருந்து மீள்விக்கப்பட்டது