பக்கம்:மதன கல்யாணி-2.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 மதன கல்யாணி

கேட்டது. அந்தக் குரல் தெய்வ கானத்தைத் தோற்கச் செய்வ தாகவும், கவலையும் கரையச் செய்யும் கணிவை உடையதாகவும் இருந்தது. அடுத்த நிமிஷத்தில், மின்னற் கொடியோ ஜெகஜ் ஜோதியோ என்று சந்தேகிக்க அற்புதமான வனப்பைத் தாங்கிய ஜெகன் மோகன மடமங்கை ஒருத்தி மெத்தைப் படிகளில் இருந்து ஒட்டமாகக் கீழே இறங்கி, ஐயோ! என் கண்ணே உனக்கு என்ன கதி நேர்ந்ததோ!’ என்ற புலம்பலோடு கட்டிலண்டை பாய்ந்து, மதனகோபாலனது உடம்பை அனைத்துக் கொண்டாள். அந்த ஆரவாரத்தைக் கேட்டு திடுக்கிட்டுத் திகைப்படைந்த துரைராஜா பின் பக்கம் திரும்பி அந்த அணங்கை நோக்க, அவன் திகைத்து திக்பிரமை கொண்டு, மோகித்து, ஸ்தம்பித்து, அசைவற்று அப்படியே நின்று விட்டான். அதைக் கண்ட செட்டியார், அவனது வலது கரத்தைப் பிடித்து, ‘வாருங்கள்; இவர்கள் பெருத்த அமர்க்களம் செய்து, ஊர் ஜனங்கள் வந்து கூடும்படி செய்து விடுவார்கள். நான் உங்களை வண்டியில் ஏற்றிவிட்டுத் திரும்பி வந்து இவர்களைச் சமாதானப்படுத்த வேண்டும்’ என்று கூறி, அவனை இழுக்க, அவன் பின்புறம் பார்த்தபடியே வெளியிற் சென்றான்.

செட்டியார் வாசற்கதவைத் திறந்து துரைராஜாவை லாரட்டில் உட்கார வைத்து அனுப்பிவிட்டுக் கதவைத் தாளிட்டுக் கொண்டு உள்ளே போய்ச் சேர்ந்தார்.

லாரட்டில் சென்ற துரைராஜா அப்படியே உருகி ஓய்ந்து போய், “ஆகா! எவர் கண்ணிலும் படாமல், நீ இங்கேயா இருக்கிறாய்! ஊரில் உள்ள ஜனங்கள் எல்லோரும், உன் மேல் மையல் கொண்டு, மோகனாங்கி! மோகனாங்கி! என்று சித்தப்பிரமை கொண்டு மூலை முடுக்குகளிலெல்லாம் தேடியலை கிறார்கள். நீ இந்த வீட்டிலா ஒளிந்து கொண்டிருக்கிறாய்! ஆகா! எவருக்கும் காணக் கிடைக்காத கட்டழகியான மோகனாங்கியை நான் பார்க்கும்படி நேர்ந்ததும் தெய்வத்தின் அருள்தான், மன்மத ஸ்வரூபன மதனகோபாலனை வைத்துக் கொண்டிருப்பதனாலே தான், நீ வேறு எவரையும் ஒரு பொருட்டாக மதிக்க மாட்டேன் என்கிறாய். சரி இருக்கட்டும் இந்த உலகத்தில் துரைராஜாவுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/154&oldid=645906" இலிருந்து மீள்விக்கப்பட்டது