பக்கம்:மதன கல்யாணி-2.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 மதன கல்யாணி

புரத்திற்குள்ளேயே இருக்கும்படி செய்து, தான் சதாகாலமும் அவர்களோடு கூடவே இருந்தாலன்றி, ஏதேனும் விபரீதமும் அவமானமும் இழிவும் ஏற்படுவது நிச்சயம் என்று நினைத்தாள்.

அவ்வாறு நினைத்ததன்றி, அந்த அம்மாள் இன்னமும் பல வகைப்பட்ட சிந்தனையிலும் உலப்பப்பட்டிருந்தாள். துரைஸானி யம்மாள் ஒடிப்போய் விடுவாளோ என்னும் அச்சத்தினால், அந்த அம்மாள், துரைஸ்ானியம்மாளை. அவளது அந்தப்புரத்திற்குள் வைத்து வெளிக்கதவைப் பூட்டிக் கொண்டு வந்ததும் கவலைக் கிடமாக இருந்தது. துரைஸானியம்மாள் அவ்வாறு சிறை வைக்கப்பட்டிருக்கிறாள் என்ற விஷயம் வேலைக்காரர்களுக்கும் தாதிகளுக்கும் அதிசீக்கிரத்தில் எட்டிவிடும் ஆதலால், அவர்கள் அவளது நடத்தையைப் பற்றி பலவாறு யூகங்களும் புரளிகளும் செய்ய இடம் கொடுக்கக் கூடியதாக இருந்தது; நிற்க, அந்த விஷயம் கோமளவல்லியின் செவிக்கு எட்டாமலிருப்பதே உசிதமாகவும் தோன்றியது. துரைஸானியம்மாள் தலைநோவினால் வருந்துவதால், எவரும் உட்புறத்தில் போய் தொந்தரவு செய்யாமல் இருப்பதற்காக, கதவு வெளியில் பூட்டப்பட்டிருக் கிறதென்ற ஒரு பொய் முகாந்தரத்தை வெளியிடுவதானாலும், அந்தத் தந்திரம் இரண்டொரு நாளைக்குப் பலிக்குமேயன்றி, அவளுக்குக் கலியாணம் ஆகும் வரையில் அவ்வாறு செய்வது அசம்பாவிதமாகவும் நம்பத்தகாததாகவும் இருந்தது. நிற்க, துரை ஸானியம்மாள் இருந்த அந்தப்புரத்தின் ஜன்னல்கள் திறந்திருந் தமையால், அவள் ஜன்னல்களினண்டையில் நின்று தாதிகளிடத் தில் தனது தாயைப் பற்றி எவ்விதமான அவதூறை வெளியிடு வாளோ என்ற அச்சமும் உண்டாயிற்று. அதுவும் தவிர, அவள் மோகனரங்கன் மேல் கடுமோகம் கொண்டிருப்பவள் ஆதலால், அவள் அவன் விஷயத்தில் செய்த இழிசெயலை மிகவும் பெருமையாக நினைத்து, வெளியிட்டாலும் வெளியிடலாம் என்ற ஐயமும் தோன்றியது. ஆகவே, கல்யாணியம்மாள் தனது மூத்த குமாரியை என்ன செய்வது என்பதைப் பற்றியும் பலவாறு சிந்தனை செய்து செய்து, எவ்வித முடிவிற்கும் வரமாட்டாமல் மெய்ம்மறந்து படுத்திருந்த சமயத்தில், வேலைக்காரி, “அம்மணி அம்மணி மைலாப்பூர் வக்கீலையா இடத்திலிருந்து குப்பன் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/156&oldid=645909" இலிருந்து மீள்விக்கப்பட்டது