பக்கம்:மதன கல்யாணி-2.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#54 மதன கல்யாணி

செய்கிறேன். இப்போது செங்கல்பட்டில் என்னுடைய நிலங்களின் மாசூல் அறுவடையாகும் காலம். அதற்காக அங்கே இன்னொரு குமாஸ்தாவை உடனே அனுப்ப வேண்டும் என்று, என்னுடைய தம்பியிடத்திலிருந்து இன்று கடிதம் வந்தது. நம்முடைய மோகனரங்கனை இரண்டு மாச காலத்துக்கு அங்கே அனுப்பி வைக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அவனை அனுப்பும்படி தங்களுக்கு நானே ஒரு கடிதம் எழுதலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த சமயத்தில், தெய்வச் செயலாக அவனே தங்களுடைய கடிதத்தை எடுத்துக் கொண்டு வந்தான். ஆகையால், அவனை இங்கேயே நிறுத்திக் கொண்டு, இந்த மறுமொழியை குப்பன் மூலமாக அனுப்பி இருக்கிறேன். எனக்கும் எழும்பூரில் அவசரமான அலுவலிருக்கிறது; மோகனரங்கனையும் என்னோடு கூடவே அழைத்துக் கொண்டு போய், 5.50 மணிக்குப் போகும் ரயில் வண்டியில் அவனை செங்கல்பட்டுக்கு அவசியம் அனுப்பப் போகிறேன். அவனை அனுப்பிவிட்டதாகவே தாங்கள் எண்ணிக்கொள்ளலாம்; இந்த விஷயத்தில், தாங்கள் என்மேல் வருத்தப்படமாட்டீர்கள் என்று உறுதியாக நம்பி இருக்கிறேன். எல்லா விவரங்களையும் நேரில் வந்து தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இப்படிக்குத் தங்கள் விதேயன்,

சிவஞானம்

-என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படித்த கல்யாணியம் மாளது முகமானது மகிழ்ச்சியினால் இரண்டொரு நிமிஷ நேரம் மலர்ந்தது. அவனது கண்கள் சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தை நோக்கின. மணி ஆறு ஆயிருந்தது. “சரி; இந்நேரம் பையன் ரயிலில் போய்க் கொண்டிருப்பான்; இனி கவலை இல்லை” என்று அந்த அம்மாள் தனக்குள்ளாகவே நினைத்துக் கொண்டு, சிறிது தூரத்தில் நின்ற குப்பனை நோக்கி, “சரி: போகலாம்” என்றாள். அவன் உடனே குனிந்து அம்மாளுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு வெளியில் போய்விட்டான்.

கல்யாணியம்மாள் திரும்பவும் தனது சயனத்தில் சாய்ந்து கொண்டாள். நரகவேதனை படுவோனது வாயில் ஒரு துளி தேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/158&oldid=645912" இலிருந்து மீள்விக்கப்பட்டது