பக்கம்:மதன கல்யாணி-2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மதன கல்யாணி

இருந்தாலும், அவரது விலையுயர்ந்த ஆடையாபரணங்களைக் கொண்டும் அவர் கிருஷ்ணாபுரத்து ஜெமீந்தாரால் அனுப்பப் பட்டவர் என்ற நினைப்பினாலும் அவள் தனது நகைப்பை அடக்கிக் கொண்டு சாய்வான நாற்காலியில் இருந்த வண்ணம் மிகவும் அமர்த்தலாக நிமிர்ந்து அவரை நோக்கி, தனது கையை நீட்டி ஒரு நாற்காலியைச் சுட்டிக்காட்டி, அதில் உட்கார்ந்து கொள்ளும்படி ஊமை ஜாடையாக உபசரித்ததன்றி, அந்த மனிதரை உற்று நோக்கி, அவர் தன்னிடம் மரியாதையாக அடங்கி ஒடுங்கி நடந்து கொள்ளுகிறாரா அல்லது தன்னை அலட்சியமாக மதிக்கிறாரா என்பதை ஆராய்ந்தாள். அந்த மனிதரும் அவளைச் சிறிதும் இலட்சியம் செய்யாதவர் போல, அவளைக் காட்டிலும் அதிக அமர்த்தலாகத் தமது சிரத்தை வைத்த வண்ணம், ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கம்பீரமாக நிமிர்ந்து கல்யாணியம்மாளைப் பார்த்து, “உங்களை இதுவரையில் பார்த்தறியாத நான் திடீரென்று வந்தது உங்களுக்கு மிகவும் ஆச்சரியமாகவே இருக்கலாம்” என்றார். அப்போது கல்யாணியம்மாள், அவரோடு வந்த வேலைக்காரனை வெளியில் போய் இருக்கும்படி சொல்லி அனுப்பிய பிறகு அவரைப் பார்த்து மிகவும் கம்பீரமாக நிமிர்ந்து, “ஆம்; உண்மைதான். தக்க மனிதர்களிடத்திலிருந்து கடிதம் கொண்டு வருபவரை அன்றி மற்றவர்கள் உள்ளே வர நான் அனுமதி கொடுக்கிறதில்லை. ஏனென்றால், கண்ட பிச்சைக்காரர்கள் எல்லாம் வண்ணானிடத்தில் துணியை இரவல் வாங்கிக் கட்டிக் கொண்டு, யாராவது ஒரு பெரிய மனிதருடைய பெயரைச் சொல்லிக் கொண்டு மகா பெரிய பிரபுவைப் போல உள்ளே நுழைந்து விடுகிறதும், உள்ளே வந்தவுடனே, தங்களுக்கு ஏதாவது பொருளுதவியையோ வேறு வகையான காரியங்களையோ செய்ய வேண்டும் என்று கெஞ்சிக் காலில் விழுந்து, விடாமல் உடத்திரவிக்கிறதும் வழக்கம். அதைப் போல நீரும், கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாருடைய பெயரை உள்ளே நுழைவதற்கு ஒரு மந்திரமாக வைத்துக் கொண்டு வந்தீரோ என்னவோ என்று என் மனம் சந்தேகப்பட்டது. ஏனென்றால், அவருக்கும் எனக்கும் இதுவரையில் எவ்விதமான பழக்கமும் இல்லை ஆகையால், அவர் இப்படி அநாகரிகமான அனுப்பி இருக்க மாட்டார் என்று என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/16&oldid=645915" இலிருந்து மீள்விக்கப்பட்டது