பக்கம்:மதன கல்யாணி-2.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 மதன கல்யாணி

இருந்தால், நம்முடைய பையனுக்கு அவன் எவ்விதமான கெடுதலும் செய்யாமல் எச்சரித்து வை. பாலாம்பாளை இப்போது மைலாப்பூரில் உள்ள ஒரு பங்களாவில் குடி வைத்திருக்கிறானாம். அதை விசாரித்துத் தெரிந்து கொள்” என்றான். அதைக் கேட்ட அம்பட்டக் கருப்பாயி, “சரி, ஒங்கிளுக்கென்ன பத்தரந்தானே ஒனும். நாளெ ராத்திரி சரியா பன்னண்டு மணிக்கு நான் பத்தரத்தோடே இஞ்சே வாறேன். நீங்க ரோசனை பண்ணாதீங்க, நானாச்சும் போறேன். கட்டையனை யாச்சும் அனுப்பிக் காரியத்தே முடிச்சுட்டு மறுசோலி பார்க்கறேன். நான் போகலாமல்ல” என்றாள்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாள், “சரி; யாராவது உன்னைப் பார்த்தாலும் பார்ப்பார்கள், நீ போய்விட்டு வா” என்றாள். அதைக் கேட்ட வேலைக்காரி, அதற்குமேல் தான் ஒளிந்திருந்து கேட்பது பிசகென்று நினைத்து, அவ்விடத்தை விட்டு விசையாகச் சென்று, அந்தப்புரத்தைச் சுற்றிக் கொண்டு அதன் முன் வாசலண்டையில் வர, அதற்குள் பொன்னம்மாள் அந்தக் கதவைத் திறந்து வைத்துவிட்டு, அம்பட்டக் கருப்பாயியை அழைத்துக் கொண்டு பின் வாசலின் வழியாக வெளியில் போய்விட்டாள் ஆதலால், கல்யாணியம்மாள் மாத்திரம் தனியாகப் படுத்திருந்தாள். வேலைக்காரி மெல்ல உள்ளே ப்ோய், மஞ்சள் குறிகள் வைத்த கடிதத்தோடு எதிரில் நிற்க, அவளைக் கண்ட கல்யாணியம்மாள், “சரி, கடிதத்தை உறைக்குள் போட்டு, வாயைமூடி, தலையை ஒட்டவை” என்றாள். வேலைக்காரி அதையும் செய்து முடித்தாள். கல்யாணியம்மாள் அவளை நோக்கி, “அடி! இந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு போய், நம்முடைய பங்களாவின் வாசலிலிருக்கும் தபால் பெட்டியில் போட்டுவிட்டு வந்து, நம்முடைய குழந்தை துரைஸானியம்மாளுடைய அந்தப்புரத் துக்குப் போ; அந்தக் குழந்தைக்கு இன்று பகல் முழுதும் தலைநோவாக இருந்தது. எவரும் உள்ளே போய் தொந்தரவு செய்யாமல், கதவைச் சாத்தி வெளிப்பக்கத்தில் பூட்டிக்கொண்டு வந்திருக்கிறேன். அந்தத் திறவுகோல் இதோ இருக்கிறது. இதையும் எடுத்துக் கொண்டு போய் கதவைத் திறந்து உள்ளே போய், இன்று ராத்திரி முழுதும் அவள் அந்த இடத்தைவிட்டு வெளியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/162&oldid=645919" இலிருந்து மீள்விக்கப்பட்டது