பக்கம்:மதன கல்யாணி-2.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 மதன கல்யாணி

துரைஸானி:- யார் வந்து எஜமானியம்மாளிடத்தில் பேசிக் கொண்டிருந்தது. நீ பார்க்கவில்லையோ?

சின்னம்மாள்:- நான் பார்க்கக்கூடவில்லை. நம்முடைய பொன்னம்மாளுடைய குரல் கேட்டது. இன்னொருத்தி யாரோ வந்திருந்தாள்.

துரைஸானி:- அவர்களிடத்தில் பேசிக் கொண்டிருந்ததும் என்னுடைய கலியாண சங்கதி தானோ?

சின்னம்மாள்:- இல்லை இல்லை. அது வேறு சங்கதி?

துரைஸானி:- அது என்ன சங்கதி?

சின்னம்மாள்:- அதை நான் முழுதும் கேட்கவில்லை. ஏதோ சில வார்த்தைகள் தற்செயலாக என்னுடைய காதில் பட்டன. எஜமானியம்மாள் இரும்புப் பெட்டியைத் திறந்து பணம் எடுத்துக் கொடுத்தது தெரிந்தது. பாலாம்பாள் என்ற பெயர் காதில் கேட்டது. நம்முடைய மைனரை உபத்திரவிக்காமல், ஏதோ ஒரு பத்திரத்தை நாளைக்குள் கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். யாரோ கட்டையன் குறவன் என்று ஒருவன் இருக்கிறானாம். அவனாவது, இங்கே வந்திருந்தவளாவது போய் பத்திரத்தைக் கொண்டுவர வேண்டும் என்று சொன்னார்கள். அவ்வளவுதான் என் காதில் விழுந்தது. அது என்ன சங்கதி என்பது எனக்கு விளங்கவில்லை. நான் அதைக் கேட்டுக் கொண் டிருந்தேன் என்பது எஜமானியம்மாளுக்குத் தெரிந்தால், என்னைக் கொன்று போட்டு விடுவார்கள்.

துரைஸானி:- இந்தச் சங்கதி எப்படி உன் காதில் எட்டியது.

சின்னம்மாள்:- நான் வந்தபோது வெளிக்கதவு சாத்தி உட்புறத்தில் தாளிடப்பட்டிருந்தது. அப்போது உட்புறத்தில் மனிதர் இருப்பார்கள் என்பதைப்பற்றி நான் சந்தேகிக்கவில்லை. ஒருவேளை எஜமானியம்மாள் இந்தக் கதவைத் தாளிட்டுக் கொண்டு புஸ்தக மகாலுக்குப் போயிருப்பார்களோ என்று நினைத்துக் கொண்டு, சுற்றிக் கொண்டு அந்தப் பக்கமாகப் போய்ப் பார்த்தேன். அந்தக் கதவும் உட்புறத்தில் தாளிடப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/168&oldid=645931" இலிருந்து மீள்விக்கப்பட்டது