பக்கம்:மதன கல்யாணி-2.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 165

பட்டிருந்தது. ஜன்னலினண்டையில் போய் கவனித்துப் பார்த்தேன். அப்போது தான் இந்த வார்த்தைகள் காதில் பட்டன.

துரைஸானி:- சரி, அம்மாள் சங்கதி ஆயிரமிருக்கும். நாம் அவைகளை எல்லாம் கவனிப்பது மரியாதைக் குறைவு; அது போகட்டும். எனக்கு இன்னமும் தலைநோவு இருந்து கொண் டிருக்கிறது; எனக்குப் பசியுமில்லை; நான் எஜமானியம்மாளுடைய உத்தரவுப்படியே இந்த இடத்திலேயே படுத்துக் கொண்டிருக் கிறேன். நீ வெளியில் பூட்டிவிட்டுத் திறவுகோலை அம்மாளிடத்தில் கொடுத்துவிடு; நீ இப்போது ஒரு காரியம் செய். என்னுடைய தாதி குப்பம்மாள் இன்று காலையில் ஏதோ அலுவலின்மேல் என்னிடத்தில் ரஜா வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போனாள். அவள் இப்போது திரும்பி வந்து சமையலறையில் இருப்பாள். நீ கதவைப்பூட்டிக் கொண்டு போகும் போது சமையலறைக்குப் போய், அவளை ஜன்னலண்டையில் வரச்சொல்லிவிட்டு நீ போ - என்றாள்.

அதைக் கேட்ட சின்னம்மாள், “ஏன் கண்ணு! குப்பம்மாளும் உள்ளேயே இருக்கட்டுமே; உங்களுக்குத் தலையைப் பிடித்து விட வேண்டுமானால் அவள் செய்வாளல்லவா; அவளையும் இங்கே வைத்துப் பூட்டிக்கொண்டு போகிறேனே?” என்றாள்.

துரைஸானி:- வேண்டாம், வேண்டாம்; எஜமானியம்மாள் கோபித்துக் கொள்ளுவார்கள். வேறு யாராவது இங்கே இருந்தால் என்னிடத்தில் பேச்சுக் கொடுப்பார்கள் என்றும், அதனால் என்னுடைய தலைநோவு அதிகரிக்கும் என்றும் நினைத்து அம்மாள் பூட்டச்சொல்லி இருக்கிறார்களே. விதைக்கோட்டையில் எலியை வைத்துக் கட்டியதைப் போல, ஒர் ஆளை உள்ளே வைத்துப் பூட்டுவதில் என்ன பலன்? அவள் வெளியிலேயே இருக்கட்டும். அவள் இந்த ஜன்னலண்டையில் வந்து ஒரே ஒரு வார்த்தை கேட்டுக்கொண்டு போகட்டும்; அதற்குமேல் அதிகமாக அவள் பேசினாலும், நான் அவளிடத்தில் பேசப்போகிறதில்லை; அவளை இங்கே அனுப்பினதாகக் கூட நீ அம்மாளிடத்தில் சொல்லு வேண்டாம்” என்றாள். அதைக் கேட்ட சின்னம்மாள் என்னும் அந்த வேலைக்காரி தான் போய் குப்பம்மாளை உடனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/169&oldid=645933" இலிருந்து மீள்விக்கப்பட்டது