பக்கம்:மதன கல்யாணி-2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 13

மனம் சந்தேகப்படுவதற்கு நியாயம் இருக்கிறதல்லவா” என்று மிகவும் அலட்சியமாக மொழிந்தாள்.

அதைக் கேட்ட அந்த மனிதர் புன்னகை செய்து, “அடாடா! நன்றா நினைத்தீர்கள்! என் உடம்பிலிருக்கும் துணிகள் சட்டைகள் எல்லாம் என்னுடையவைகளே! நீங்கள் சந்தேகப்படவே வேண்டாம். நான் உங்களிடத்தில் எவ்விதமான யாசகத்துக்கும் வரவில்லை என்பதை நீங்கள் உறுதியாக நம்பி, உங்களுடைய கவலையை நீக்கி விடலாம். நான் கிருஷ்ணாபுரம் ஜெமீந்தா ருடைய கூட்டாளி. சந்தனக்கட்டை வியாபாரம் செய்யும் பசவண்ண செட்டியார் என்றால், மைசூரில் குழந்தைகளுக்குக் கூட நன்றாகத் தெரியும்; நான் வேறே எதற்காகவும் வரவில்லை; எங்களுடைய ஊர் மனிதரான ஒருவரைக் குறித்து ஒரு முக்கியமான நிகழ்ச்சியின் சம்பந்தமாக உங்களோடு பேசிவிட்டுப் போக வேண்டும் என்று வந்தேன். அந்த மனிதருடைய பெயர் மதனகோபாலன் என்பார்கள்” என்றார். -

அவரது சொல்லைக் கேட்ட கல்யாணியம்மாள் திடுக்கிட்டுத் திகைப்பும் குழப்பமும் அடைந்தாள். அந்த மனிதர் மதனகோ பாலனது விஷயமாகப் பேச வந்திருப்பார் என்பதை அவள் சிறிதும் எதிர்பார்க்காமலும், அவர் கேட்ட பிறகு, தான் எவ்விதமாக மறுமொழி சொல்வதென்பதைப் பற்றி யோசியாமலும் இருந்தவள் ஆதலால், அவள் இரண்டொரு நிமிஷ நேரம் திக்குமுக்காடிப் போய்விட்டாள். ஆனாலும், அவள் மிகுந்த தைரியமும் சமயோ சிதமான தந்திரமும் உடையவள் ஆதலால், அதிசீக்கிரத்தில் அவள் தனது துன்பக்குறிகளை மாற்றிக் கொண்டாள். அந்த மனிதர் மதன கோபாலனது விஷயத்தில் தன் மீது குற்றம் சுமத்தி தன்னைக் கண்டிக்க வந்திருக்கிறார் என்பது அவளது மனதில் நிச்சயமாகப் பட்டது. அந்த அவமானத்திலும் சங்கடத்திலும் இருந்து தான் எவ்வாறு தப்புவதென்ற பெருத்த கவலை, அவளது மனதை வதைத்துப் புண்படுத்தியது ஆனாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், நிரம்பவும் அலட்சியமாகவும் கம்பீரமாகவும் நிமிர்ந்து உட்கார்ந்து, “ஒகோ! அப்படியா நீர் வயதான பெரிய மனிதர் என்பதை உத்தேசித்து, நீர் சொல்லும் சமாதானங்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/17&oldid=645935" இலிருந்து மீள்விக்கப்பட்டது