பக்கம்:மதன கல்யாணி-2.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 மதன கல்யாணி

அனுப்புவதாகச் சொல்லிவிட்டு, விடை பெற்றுக் கொண்டு, வெளியே போய் கதவைச் சாத்திப் பூட்டிக் கொண்டு சமையலறையிலிருந்த குப்பம்மாளை உடனே அனுப்பிவிட்டு, கல்யாணியம்மாளின் அந்தப்புரத்திற்குப் போய் திறவுகோலைக் கொடுத்ததன்றி துரைஸானியம்மாளுக்கு இன்னம் தலை நோவிருப்பதாகவும் அவளுக்குப் பசியில்லாமையால், சாப்பாடு வேண்டாம் என்றும், கதவைப் பூட்டிக் கொண்டு போகும்படிக்கும் சொல்லித் தன்னை அனுப்பிவிட்டதாகச் சுருக்கமாகக் கூறினாள். குப்பம்மாளை வரச்சொன்னதையும், தான் துரைஸாணி யம்மாளிடத்தில் சொன்ன மற்ற வரலாறுகளைப் பற்றியும் அவளை குறிக்காமலே விட்டு விட்டாள்.

துரைஸானியம்மாள் எவ்வித முரண்டலும் செய்யாமல் சாதுவாக நடந்து கொண்டதைக் கேட்ட கல்யாணியம்மாள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தவளாய், அதிசீக்கிரத்தில் அவளுக்கு நல்ல புத்தி திரும்பி விடும் என்றும் நினைத்தவளாய், தனது போஜனத்திற்கு எழுந்தாள். அதுகாறும் தான் கோமளவல்லியை கவனிக்க நேரமில்லாது போனதை நினைத்துக் கொண்ட அந்தச் சீமாட்டி, தனது அந்தப்புரத்தை விட்டுப்புறப்பட்டு, கோமளவல்லி இருந்த அந்தப்புரத்தை நோக்கிச் செல்லத் தொடங்கினாள்.

நாம், அந்த அம்மாளை விடுத்து, துரைஸானியம்மாளது அந்தப் புரத்தில் என்ன நடந்ததென்பதைக் கவனிப்போம். சின்னம்மாள் சமையலறைக்குப் போய்ச் சொன்னவுடனே குப்பம்மாள் மிகவும் விரைவாகத் தனது எஜமாட்டியான துரைஸ்ானியம்மாள் சிறை வைக்கப்பட்டிருந்த அந்தப்புரத்திற்கு வந்து சேர்ந்தாள். குப்பம்மாள் என்பவள் மகா புத்திசாலி; தனது எஜமாட்டியான துரைஸானியின் மனம்போல நடந்து, அவளிடத்திலிருந்து ஏராளமான சன்மானம் பெறுபவள். துரைஸ்ானியம்மாளது ரகசியங்களையும் அவளுக்குத் தெரிந்திருந்தனவாயினும், தன்னை வெட்டிச் சித்திரவதை செய்வதானாலும், அவள் தனது எஜமாட்டிக்கு விரோதமான விஷயத்தை வெளியிடக் கூடியவ ளன்று; அவள் அன்று மாலையில் வந்தவுடன் அந்தப்புரத் தண்டை போய், ஜன்னலுக்கருகில் நின்று, துரைஸானியம்மாளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/170&oldid=645936" இலிருந்து மீள்விக்கப்பட்டது