பக்கம்:மதன கல்யாணி-2.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 167

அழைத்து, அவளிடத்திலிருந்து எல்லா விவரங்களையும் கேட்டறிந்து கொண்டு, ஒன்றையும் அறியாத பைத்தியக்காரியைப் போல சமையலறையில் போய் உட்கார்ந்திருந்தாள். கல்யாணியம் மாள் மோகனரங்கனை என்ன செய்கிறாள் அல்லது எங்கே அனுப்புகிறாள் என்னும் விஷயத்தை நன்றாக உணர்ந்து கொண்டு வரும்படி அவளிடத்தில் துரைஸானியம்மாள் உத்தரவு செய்திருந் தாள். பிறர் சந்தேகியா விதத்தில், அவள் அந்த வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தவள், சின்னம்மாளது சொல்லைக் கேட்டவுடனே பதுங்கிப் பதுங்கி ஜன்னலண்டை வந்து, மெதுவாக விரல்களைச் சொடுக்கி ஒசை செய்தாள். அந்தத் தந்தி சமாசாரத்தைக் கேட்ட துரைஸானியம்மாள் உள்ளே இருந்த விளக்கை அணைத்துவிட்டு, இருளில் ஜன்னலுக்கு அப்புறத்தில் வந்து நின்று, “அடி குப்பி நீ உடனே நம்முடைய கச்சேரிக்குப் போய் எஜமானியம்மாள் கேட்பதாகச் சொல்லி இன்னொரு அரை யனாத் தலை வாங்கிக்கொண்டு, இன்னம் ஒரு நாழிகை நேரம் பொறுத்து இங்கே வா; அவசரமான ஒரு காரியம் இருக்கிறது. மைலாப்பூருக்குப் போன மோகனரங்கன் திரும்பிவராத காரணம் என்ன என்பதையும் தந்திரமாகப் பெரிய குமாஸ்தாவிடத்தில் விசாரித்தறிந்து வா; நிற்காதே; அம்மாள் வந்தாலும் வருவார்கள் போ” என்றாள். குப்பம்மாள் உடனே போய்விட்டாள்.

துரைஸானியம்மாள் உடனே தனது அந்தப்புரத்தின் ஜன்னல் களின் கதவுகளை எல்லாம் உட்புறத்தில் மூடித் தாளிட்டுக் கொண்டாள். வெளிப்புறத்தில் பூட்டப்பட்டிருந்த வாசல் கதவையும் உட்புறத்தில் தாளிட்டுக் கொண்டாள்; மின்சார விளக்கைக் கொளுத்தி விட்டவளாய், கட்டிலிற்கருகில் கிடந்த ஒரு மேஜையண்டையிற் போய், அதன் பக்கத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்து, மேஜைக்குள்ளிருந்து காகிதம் மைக்கூடு இறகு முதலியவற்றை எடுத்து வைத்துக்கொண்டு இரண்டு கடிதங்கள் எழுதத் தொடங்கினாள்.

முதலாவது கடிதம் அடியில் வருமாறு எழுதப்பட்டது:மதுரை ஜில்லாவில் உள்ள ராமலிங்கபுரம் ஜெமீந்தார் அவர்கள் சமுகத்துக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/171&oldid=645938" இலிருந்து மீள்விக்கப்பட்டது