பக்கம்:மதன கல்யாணி-2.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 169

ஏற்படுவதொன்று தான் நிச்சயமாக மிஞ்சும். பெண் கலியானப் பந்தலுக்கே வரப்போகிறதில்லை. *

இப்படிக்கு, ஒர் எதிர்பாரா நண்பன்.

-என்று துரைஸானியம்மாள் ஒரு கடிதம் எழுதி முடித்து மடித்து, அந்த விலாசத்திற்கு ஒர் உறை தயாரித்து அதற்குள் திணித்து வாயை ஒட்டி வைத்துக் கொண்ட பிறகு, இன்னொரு கடிதம் அடியில் வருமாறு எழுதத் துவக்கினாள்:

பிரியமுள்ள அண்ணன் அவர்களுக்கு துரைஸ்ானியம்மாள் எழுதிக் கொள்வது.

இன்றைய தினம் காலையில் நீங்கள் அம்மாளிடத்தில் பேசிக் கொண்டிருந்து விட்டுப் போனவுடனே, அம்மாள் பொன்னியை ஆலந்துருக்கு அனுப்பி, அங்கேயுள்ள அம்பட்டக் கருப்பாயியை அழைத்துக் கொண்டு வரச் சொன்னார்கள். அவள் அப்படியே போய் கருப்பாயியை அழைத்துக் கொண்டு இன்று சாயங்காலம் ஏழரை மணிக்கு வந்தாள். அம்மாளுடைய அந்தப்புரத்தில் அவர்கள் மூவரும் இருந்து ரகசியமாகப் பேசினார்கள். நீங்கள் பாலாம்பாளுக்கு எழுதிக் கொடுத்திருக்கும் பத்திரத்தை நாளைக் குள்ளாக அபகரித்துக் கொண்டு வந்து கொடுத்துவிட வேண்டும் என்று அம்மாள் கருப்பாயியிடத்தில் சொல்லி, ஏராளமான பணமும் கொடுத்தார்கள்; பத்திரம் வந்தவுடனே, இன்னமும் பணம் கொடுப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். அவளாவது கட்டையன் i வந்து பத்திரத்தை எடுத்துக் கொண்டு வருகிறதென்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. உங்கள் விஷயத் தில், அம்மாள், இப்படி இரண்டகமாக நடந்து கொள்வது என் மனசுக்குப் பிடிக்கவில்லை. ஆகையால் இதை உடனே தெரிவித் திருக்கிறேன். இதற்குத் தக்கபடி முன் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள். ஆனால் இந்தச் சங்கதியை நான் தெரிவித்தேன் என்பது மாத்திரம் அம்மாளுக்குத் தெரிய வேண்டாம். இந்தக் கடிதத்தைப் பார்த்தவுடனே கிழித்தெறிந்துவிட வேண்டியது.

இப்படிக்கு பிரியமுள்ள, துரைஸானி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/173&oldid=645942" இலிருந்து மீள்விக்கப்பட்டது