பக்கம்:மதன கல்யாணி-2.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 மதன கல்யாணி

-என்று எழுதப்பட்ட இரண்டாவது கடிதத்தையும் ஓர் உறைக்குள் புகுத்தி வாயை ஒட்டி மேல்விலாசம் எழுதி அதையும், முன்னால் எழுதப்பட்ட கடிதத்தையும் கையில் எடுத்துக் கொண்டு, எழுந்து மறுபடியும் மின்சார விளக்கை அவித்துவிட்டு, நடந்து முன் குறிக்கப்பட்ட ஜன்னலண்டையில் வந்து நின்றாள். அவள் அவ்வாறு அரைக்க்ால் நாழிகை நேரம் நிற்க, அவளது அந்தரங்கத் தாதியான குப்பம்மாள், எலி பிடிக்கப்போகும் பூனையைப் போல, சிறிதும் ஓசை செய்யாமல், வெண்ணெயில் காலடி வைத்து வருபவள்போல, நடந்து வந்து, ஜன்னலண்டை நின்று, “எஜமானி யம்மாளும், கோமளவல்லியம்மாளும் சாப்பிட்டுக் கொண்டிருக்கி றார்கள். மோகனரங்கனை வக்கீல் முதலியார் ஏதோ அவசர நிமித்தம் நிறுத்திக் கொண்டதாக பெரிய குமாஸ்தா சொல்லுகிறார். அதற்கு மேல் அதிகமான விவரமொன்றும் தெரியவில்லை. தபால் தலை இதோ இருக்கிறது” என்று கூறிய வண்ணம், தபால் தலையை ஜன்னலுக்குள் நீட்டினாள். அதை வாங்கிய துரைஸானி யம்மாள், ராமலிங்கபுரம் ஜெமீந்தாருக்கு எழுதப்பட்ட அநாம தேயக் கடிதத்தில் அதை ஒட்டி, குப்பமாளிடத்தில் கொடுத்து, “இப்போதே போய், இதைத் தபால் பெட்டியில் போட்டுவிடு; இதோ இன்னொரு கடிதமிருக்கிறது. இதை நாளைக் காலை வரையில் ஜாக்கிரதையாக மறைத்துக் கொண்டிரு. நம்முடைய அண்ணன் இப்போது மைலாப்பூரில் பாலாம்பாளுடைய பங்களாவில் இருக்கிறார். அதிகாலையில் நீ மைலாப்பூருக்குப் போய், அண்ணன் எந்த பங்களாவில் இருக்கிறார்கள் என்பதை விசாரித்து அங்கே போய், அவரிடத்தில் இதைக் கொடுத்து, அவர் படித்தவுடனே கிழத்தெறிந்து விடச் சொல்லிவிட்டு, நீ உடனே வக்கீல் ஐயா வீட்டுக்குப் போய் வண்டிக்கார வேலாயுதத்தைக் கண்டு, தந்திரமாகப் பேச்சுக் கொடுத்து, மோகனரங்கன் எங்கே இருக்கிறான் என்ற விவரங்களை எல்லாம் தெரிந்து கொண்டு செளகரியப்பட்டால், மோகனரங்கன் இருக்கும் இடத்துக்குப் போய், அவனுடைய சங்கதிகளை எல்லாம் அறிந்து கொண்டு வந்து சேர்’ என்றாள். குப்பம்மாள் அப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டு, கடிதங்கள் இரண்டையும் பெற்றுக் கொண்டு போகவே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/174&oldid=645943" இலிருந்து மீள்விக்கப்பட்டது