பக்கம்:மதன கல்யாணி-2.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 171

துரைஸானியம்மாள் உள்ளே போய் சயனித்துக் கொண்டாள். குப்பம்மாள், ராமலிங்கபுரம் ஜெமீந்தாருக்கு எழுதப்பட்ட கடிதத்தைத் தபால் பெட்டியில் போட்டுவிட்டு, இன்னொரு கடிதத்தை ஜாக்கிரதையாக மடியில் சொருகிக் கொண்டு, எப்போது பொழுது விடியும் என்று ஆவலோடு எதிர்பார்த்தவளாய் அன்றிரவைப் போக்கினாள். ஆனால் அவள் இரண்டு கடிதங் களையும் படித்துவிட்டாள்.


22-வது அதிகாரம் ராஜாயி அம்மாள்

செழும்பூரில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டிற்குப் போய்க் கொண்டிருந்த ரயில் வண்டியில் உட்கார்ந்திருந்த மோகனரங்கதுை மன நிலைமை சொல்லால் விவரிக்கக்கூடாத அவ்வளவு துன்பகர மானதாக இருந்தது. தான் கல்யாணியம்மாளது பங்களாவிலிருந்து மைலாப்பூருக்குச் சென்ற போது, கடிதத்தை வக்கீலிடத்தில் கொடுத்து விட்டு, அரை மணி நேரத்திற்குள் திரும்பி வந்து, தன் மனதையும் உயிரையும் கொள்ளை கொண்ட உயிர்த் தெய்வ மான துரைஸ்ானியம்மாளைத் தரிசிப்பதான பரமசுகத்தை அடையலாம் என்று எண்ணிய எண்ணம் ஒரே நொடியில் சிதறுண்டு போனதும், தான் மறுபடியும் அந்த பங்களாவுக்கே போகக்கூடாமல் தடுக்கப்பட்டு பலவந்தமாக வேறு ஊருக்கு அனுப்பப்பட்டதான சகிக்க ஒண்ணாத ஏமாற்றமும், அந்த வடிவழகியும் தானும் மறுநாளைக்குள் தனியான ஓர் இடத்திற்குப் போய்ப் பிறரது இடைஞ்சலின்றித் தம்மனமாரச் சிற்றின்ப சுகத்தில் ஆழ்ந்திருக்கலாம் என்று நினைத்த நினைவு பாழாய்ப் போனதனால் உண்டான ஏக்கமும் ஒன்றுகூடி அரைமணி நேரம் வரையில் அவன் எவ்விதமான தெளிவான யோசனையும் செய்யும் திறனற்று சித்தப்பிரமை கொண்டவனைப் போல ஒய்ந்து உட்கார்ந்து, தனது மனதையும் பார்வையையும் ஒரே நிலையில் நிறுத்தி, வெறுவெளியை நோக்கிய வண்ணம் கலங்கி யிருந்தான். அநாதைகளான தன்னையும் தனது அக்காளையும் காப்பாற்றி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/175&oldid=645945" இலிருந்து மீள்விக்கப்பட்டது