பக்கம்:மதன கல்யாணி-2.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 மதன கல்யாணி

வேலைகளில் அமர்த்திய பேருபகாரியான சிவஞான முதலியாரது சொற்படி நடக்க தான் கட்டுப்பட்டவன் என்ற எண்ணம் அடிக்கடி அவனது மனத்தில் எழுந்து அவனைக் கண்டித்ததாயினும், அவளது அகக்கண்ணிற்குள் சதாகாலமும் நின்று சிரித்துத் தாண்டவமாடிய துரைஸானியம்மாளது இங்கித வடிவத்திற்கு முன், வேறு எவ்வித உணர்ச்சியும் தலைகாட்டாமல் பறந்து போயிற்று. தான் சிவஞான முதலியாரது அபிமானத்தையும் நட்பையும் உதவிகளையும் இனி இழக்க நேருவதாயினும், அவனுக்கு அது ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. தன்னையே உயிராக மதித்துள்ள அரிய பெண்மணியான துரைஸானியம்மாள் தனது பிரிவைச் சகிக்க மாட்டாதவளாய், அப்படியே உருகித் தனது உயிரைத் துறந்து விடுவாள் ஆதலால், தான் அந்த அணங்கை அப்படிப்பட்ட பெருத்த துன்பத்திற்கும் ஆளாக்கி விட்டு, தனது அற்ப உத்தியோகத்தை ஒரு பொருட்டாக மதித்து தான் செங்கல்பட்டிற்குப் போவது கூடாதென அவன் ஒரே நொடியில் தீர்மானித்துக் கொண்டான். ஆனால், அவன் சிறிதும் கபட நினைவற்ற சிறியோன் ஆதலால், தான் செங்கல்பட்டிற்கு அனுப்பப்பட்டது கல்யாணியம்மாளது துண்டுதலினால் ஏற்பட்ட காரியம் என்று சிறிதும் சந்தேகம் கொள்ளாமல், சிவஞான முதலியார் சொன்ன கட்டுக்கதையை நிஜமானதென்றே எண்ணி இருந்தான். ஆகவே, அவன் அவரால் தமது தம்பிக்கு எழுதிக் கொடுக்கப்பட்ட கடிதத்தைப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்ற நினைவே கொள்ளாதவனாக இருந்தான். ஆனால், தான் அப்போது செங்கல்பட்டிற்குப் போக வேண்டியதான உத்தரவை மீறி நின்றுவிட்டால், தன்னை இனி மாரமங்கலத்தாரது பங்கள விலும் வேலைக்கு வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதும் அவனுக்குத் தெளிவாகப் பட்டது. அவ்வாறு தான் மாரமங்கலத் தாரது பங்களாவிற்குப் போகும் சந்தர்ப்பம் இல்லாமற் போனால், தான் அந்த அணங்கை எப்படிக் காண்கிறது, அவளை எப்படி அழைத்துக் கொள்கிறது என்ற பெருத்த சந்தேகமும் கவலையும் எழுந்து அவனை வதைக்கத் தொடங்கின. அவன் அவ்வாறு யோசனை செய்தவண்ணம் இருக்க, ரயில் வண்டி பல்லாவரம் என்னும் ஸ்டேஷனுக்குப் போய்விட்டது. சென்னையில் உள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/176&oldid=645947" இலிருந்து மீள்விக்கப்பட்டது