பக்கம்:மதன கல்யாணி-2.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 மதன கல்யாணி

வேலையிலும் அமர்த்தினார். சுமார் இரண்டு வருஷங்களுக், முன், அவளுக்கு வயது பதினெட்டாகி இருந்தது; அப்போது அவளுக்கும் சுந்தரம் பிள்ளை என்று பெயர் கொண்ட ஒரு போலீஸ் ஹெட்கான்ஸ்டேபிலுக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது சிநேகமாக முதிர, முடிவில் அவர்கள் கணவனும் மனைவியுமாக ஆகிவிட்டனர். ஆகவே, அவள் தனது பள்ளிக்கூட உத்தி யோகத்தை விலக்கிவிட்டு, சுந்தரம்பிள்ளையின் போஷனைக் குள்ளாக வந்து, அவரோடு அடையாறு என்ற ஊரில் இருந்து வந்தான். அந்த சுந்தரம்பிள்ளை சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் வேலையாக இருந்தார். ஆனால், ஒரு வருஷ காலத்திற்கு முன் மோகனரங்கன் தனது அக்காளைப் பார்த்து விட்டு வரும் எண்ணத்தோடு அடையாற்றுக்குப் போயிருந்த காலத்தில், சுந்தரம் பிள்ளை ஏதோ தவறு செய்து விட்டதற்காக, அவரது உத்தியோகத்திலிருந்து விலக்கப்பட்டுப் போய், அதைக் குறித்து மேலதிகாரிக்கு அப்பீல் செய்து அதன் முடிவை ஆவலோடு எதிர்பார்த்திருந்தார். ஆதலால், அப்போது அவர்கள் தங்களது ஜீவனத்திற்கு மிகவும் துன்பமுற்றிருந்தார்கள். அந்த நினைவு இப்போது மோகனரங்கனுக்கு உண்டாயிற்று; சுந்தரம் பிள்ளைக்கு மறுபடியும் உத்தியோகம் கிடைத்ததோ இல்லையோ என்றும், அவர்கள் வருமானம் இல்லாமையால் வருந்தும் காலத்தில் தானும் அவர்களுக்குப் பாரமாக அங்கே போய்ச் சேர்ந்தால், அவர்கள் இன்னமும் அதிகமாக வருந்துவார் களோ என்றும் அவன் பலவாறு எண்ணமிடத் தொடங்கினான். அவர்கள் தமது ஜீவனத்தை உத்தேசித்து, அவ்விடத்தை விட்டு, வேறு எங்கேயாகிலும் போயிருந்தால், தான் அந்த ஊர் வரையில் போய், வீணாக அலைந்து விட்டுத் திரும்பும்படியாக இருக்குமே என்ற நினைவும் தோன்றியது; ஆகையால், அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. தனது அத்தானான சுந்தரம் பிள்ளை என்பவர் சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் இருந்தமை யால், அந்த ஊரில் உள்ள போலிஸ் ஜெவான்களில் எவனாகிலும் ஒருவனைக் கண்டு, சுந்தரம் பிள்ளையைப் பற்றி விசாரித்தால், அவரும் தனது அக்காளும் எங்கே இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம் என்று நினைத்த மோகனரங்கன், ரயிலடியி லிருந்து தான் சென்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/178&oldid=645951" இலிருந்து மீள்விக்கப்பட்டது