பக்கம்:மதன கல்யாணி-2.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 177

சென்ற சமயத்தில், அந்த வண்டியில் இருப்பவர்கள் யார் என்று அவன் தற்செயலாகத் திரும்பிப் பார்த்து, அவர்கள் இஸ்லாமாண வர்களாக இருந்ததைக் கண்டு, தனது முகத்தை அப்புறம் திருப்பிக் கொண்டு, மேலே நடக்கத் தொடங்கினான். ஆனால், அந்தக் கடைசி வண்டி உடனே நின்றது. உட்புறத்தில் உட்கார்ந்திருந்த இஸ்லாமானவர், தமது கைகளைத் தட்டி, “ஐயா! ஐயா!’ என்று கூப்பிட்டார். அதைக் கேட்டு திடுக்கிட்டுத் திகைப்பும் வியப்பும் அடைந்த மோகனரங்கன் நின்றபடியே திரும்பி, அந்த வண்டிக்குள் இருந்து அழைத்த மனிதரை நோக்க, அவர் இனிமையாகப் புன்னகை செய்த முகத்தோடு, “ஐயா! கொஞ்சம் இப்படி வாருங்கள்; ஒரு சங்கதி இருக்கிறது” என்றார்.

அதைக் கேட்ட மோகனரங்கன் தான் அதற்கு முன் பார்த்தறியாத அந்த மனிதர், தன்னிடத்தில் எந்தச் சங்கதியைப் பற்றிப் பேசுவார் என்று பெருத்த சந்தேகமும் திகிலும் அடைந்தவனாய் சிறிது தயங்கி நின்று, “என்னையா கூப்பிடுகிறீர்கள்?” என்று சந்தேக மாகக் கேட்க, அந்த மனிதர் நயமாக வற்புறுத்தி, “ஆம்; உம்மைத் தான் கூப்பிடுகிறேன். ஒரே ஒரு வார்த்தை” என்றார். அதைக் கேட்ட மோகனரங்கன், அவர் ஒருகால், சைதாப்பேட்டை எவ்வளவு துரத்திலிருக்கிறதென்றாவது, அல்லது, ரயில் வண்டி வரும் மணிக்கணக்கு முதலிய ஏதாவது விவரத்தையாவது கேட்டறிந்து கொள்ளும் பொருட்டு தன்னை அழைக்கிறார் என்று ஒருவாறு உத்தேசித்துக் கொண்டு, மெல்ல நடந்து வண்டிக்குப் பின்னால் நின்றான். வண்டியில் கோஷாப் பெண்பிள்ளை இருப்பதைக் கருதி, அவன் அந்த ஸ்திரீ சாய்ந்திருந்த பக்கமாக மறைந்து அவளது கண்ணில் படாமல் ஒதுங்கி நின்று, “என்ன விசேஷம்?” என்றான்.

உடனே அந்த முஸல்மான் மோகனரங்கனை நோக்கி, “உம்மை எங்கேயோ பார்த்த மாதிரியாக இருக்கிறதே! நீர் எப்போதாவது அடையாற்றுக்கு வந்திருக்கிறீரா?” என்றார்.

உடனே மோகனரங்கன் அவரது முகத்தை உற்று நோக்க, அதுவும் பழக்கமான முகமாகத் தோன்றியது. அவன் அவரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/181&oldid=645958" இலிருந்து மீள்விக்கப்பட்டது