பக்கம்:மதன கல்யாணி-2.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 479

மாட்டாத பெருத்த திகில் கொண்டவனாய், துயரமே வடிவாக ஏங்கி நிற்க, அந்தப் பரிதாபகரமான தோற்றத்தைக் கண்டு ஒருவாறு கலக்கமடைந்த இஸ்லாமானவர் அவனை நோக்கி, “ஐயா! உம்முடைய அத்தானும் அக்காளும் செளக்கியமாகவே இருக்கிறார்கள். வேலை போய்விட்டதனால், அவர்களுடைய சாப்பாட்டுக்கு எவ்வித கஷ்டமும் உண்டாகவில்லை. சுந்தரம் பிள்ளை என்பவருக்கு பூர்வீகமாக சொத்து ஏராளமாக இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு அவர்கள் செளக்கியமாக இருக்கிறார்கள். அவர்கள் இப்போது அடையாற்றில் இல்லை; சென்னைப் பட்டணத்தில், அங்கப்ப நாய்க்கன் தெருவில், ஒரு பெருத்த மாடி வீட்டில் இருக்கிறார்கள். அவர் தம்மிடத்தில் உள்ள சொத்தை வைத்துக் கொண்டு ஏதோ ஒரு வர்த்தகம் செய்வதாகத் தெரிகிறது. நான் இங்கே அடையாற்றில் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரன், ஏதோ அவசரமாகத் தனக்கு வீடு வேண்டும் என்றும் உடனே வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்றும் நோட்டீஸ் கொடுத்து விட்டான். நான் உடனே உம்முடைய அத்தானுக்கு எழுதி எனக்கும் அங்கேயே அவசரமாக ஒர் இடம் பார்க்கும்படி கேட்டுக் கொண்டேன்; அவர் சாமான்களோடு தம்முடைய வீட்டுக்கு வந்தால், உடனே ஒர் இடம் பார்த்து விடலாம் என்று எழுதினார். ஆகையால் நான் சாமான்களை எல்லாம் எடுத்துக் கொண்டு, பட்டணத்தில் உள்ள அவருடைய ஜாகைக்குத் தான் போகிறேன். நான் இஸ்லாமானவன், அவர் ஹிந்து. அப்படி இருந்தும் எங்களுக்குள் பேதமில்லை. ஒரு தாயின் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகளைப் போல நாங்கள் பழகிவிட்டோம்; அவர் இந்த ஊரைவிட்டுப் போய் விட்டாலும் அவருடைய பழைய வாத்சல்யம் குறையவே இல்லை” என்றான்.

அந்த விவரங்களைக் கேட்ட மோகனரங்கன் கரைகடந்த மகிழ்ச்சி அடைந்தான் தனது அத்தானுக்கு வேலையில்லாது போனாலும், அவர்கள் நல்ல நிலைமையில் இருப்பதைக் கேட்க, அவனது மனம் ஆனந்தமடைந்தது. அதோடு, அந்த இஸ்லாமானவர் தன்னை சந்தியாமல் போயிருந்தால், தான் அடையாறு வரையில் போய் அலைந்து, ஒரு விவரத்தையும் அறிந்து கொள்ள மாட்டாமல், தவித்துத் திண்டாடாமல், நல்ல சமயத்தில்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/183&oldid=645961" இலிருந்து மீள்விக்கப்பட்டது