பக்கம்:மதன கல்யாணி-2.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18O மதன கல்யாணி

அவரைச் சந்திக்க நேர்ந்ததும் ஒர் அதிர்ஷ்டம் என்று நினைத்து உவகை கொண்டான். அவ்வாறு அவன் இரட்டிப்பு சந்தோஷத் தினால் பூரித்து நின்றதைக் கண்ட இஸ்லாமானவர், “சரி, இனியும் கால தாமதம் செய்து கொண்டு ஏன் வீணில் நிற்க வேண்டும். நீரும் இந்த வண்டிகளில் ஏதாவது ஒன்றில் ஏறிக்கொண்டு எங்களோடு வாரும்; உம்மை உம்முடைய அத்தானிருக்கும் இடத்தில் கொண்டு போய்ச் சேர்க்கிறேன்” என்று கூறிய வண்ணம், முன்னால் சென்ற சாமான் வண்டிகளின் வண்டிக்காரர்களைக் கூவி அழைத்து வண்டிகளை நிறுத்தச் செய்தவராய்க் கீழே இறங்கினார். இறங்கினவர் அவ்வாறு நிறுத்தப்பட்ட சாமான் வண்டிகளிருந்த இடத்திற்குப் போய், அவைகளில் ஒன்றிலிருந்த சாமான்களில் பலவற்றை எடுத்து ராஜபாட்டையில் வைத்து, அந்த வண்டியின் பின்னால் அரைப்பாகம் வரையில் காலி செய்து விட்டு, உடனே தமது கோஷா மனைவி இருந்த வண்டிக்கு வந்து அவளை அந்த வண்டியில் இருந்து கீழே இறங்கச் செய்து, அழைத்துக் கொண்டு போய், காலி செய்யப் பட்ட சாமான் வண்டியின் பின்புறத்தில் அவளை ஏறி உட்காரச் செய்து, அவ்விடத்தில் தாம் செல்ல வேண்டிய விஷயங்களைச் சொல்லியபின் சாமான் வண்டிகளை விசையாக ஒட்டிக் கொண்டு முன்னால் செல்லும்படி வண்டிக்காரர்களிடத்தில் சொல்ல, அவ்வாறே அந்த இரண்டு வண்டிகளும் புறப்பட்டுப் போய் விட்டன. உடனே அந்த இஸ்லாமானவர், பின்னால் நின்ற வெற்று வண்டியை, சாமான்கள் கிடந்த இடத்திற்கு ஒட்டிக் கொண்டு வரும்படி கூப்பிட, வண்டிக்காரன் அந்த வண்டியை ஒட்டிக்கொண்டு போய், அந்த இடத்தில் நிறுத்த, சாயப்பு, கீழே கிடந்த சாமான்களை எல்லாம் எடுத்து அந்த வண்டியின் முன்புறத்தில் பாதி பாகத்திற்குள் அடக்கி வைத்த பின்னர், மோகரங்கனை அழைத்து, அதன் பின்புறத்தில் ஏறிக் கொள்ளும் படி கூற, அவன் அவ்வாறு ஏறி உட்கார்ந்து கொண்டான். சாயப்புவும் அந்த வண்டியிலேயே ஏறி, மோகனரங்கனுக்கருகில் உட்கார்ந்து கொண்டு, ஒட்டும்படி கூற, வண்டிக்காரன் உடனே ஒட்ட ஆரம்பித்தான். முதல் வண்டிகள் இரண்டும் நெடுந்துத் திற்கு முன்னால் போய் மறைந்துவிட்டன. மோகனரங்கனும் சாயப்புவும் இருந்த வண்டி அதி விசையாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/184&oldid=645963" இலிருந்து மீள்விக்கப்பட்டது