பக்கம்:மதன கல்யாணி-2.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 18:

போகாமல், சாதாரணமாக ஒடிக் கொண்டிருந்தது. தனது விஷயத்தில், சாயப்பு எடுத்துக் கொண்ட பிரயாசையையும், காட்டிய அன்பையும் கண்ட மோகனரங்கன் நன்றியறிதலினால் இளகியவனாய், சாயப்புவை நோக்கி, “எனக்காக நீங்கள் சாமான்களை எல்லாம் இறக்கி ஏற்றி உங்களுடைய சம்சாரத்தையும் வேறே வண்டிக்கு அனுப்பி எவ்வளவு பிரயாசை எடுத்துக் கொண்டீர்கள்! அந்த சாமான் வண்டிகளில் ஏதாவது ஒன்றில், நான் தொற்றி உட்கார்ந்திருந்தாலும், அதுவே போதுமானதாயிற்றே” என்றான். அதைக் கேட்ட சாயப்பு, “அதுவா மரியாதை! உம்முடைய அத்தான், என்னைத் தம்முடைய வீட்டிலேயே வந்து தங்கும்படி அவ்வளவு பிரியமாக நடக்கும் போது, இந்த வண்டியில் உமக்கு உட்கார இடம் செய்து கொடுப்பது ஒரு பெரிய காரியமா?” என்றார். அதைக் கேட்ட மோகனரங்கன் அதற்குமேல் உபசார வார்த்தை சொல்லமாட்டாத வனாய் சிறிது மெளனமாக இருந்து, “உங்களுடைய பெயர் என்ன?” என்றான். சாயப்பு, “என்னுடைய பெயர் அப்துல்கணி ராவுத்தர் என்பர்கள்” என்றார். அதன் பிறகு அவர்கள் லோகாபிராமமாகப் பற்பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டே சென்றனர். அந்த விஷயங்கள் நமது கதைக்கு சம்பந்தப் படாதவையாதலால், அவைகளை விரிப்பது படிப்போருக்குத் துன்பகரமாக இருக்குமென விடுத்து, மேலே நிகழ்ந்தனவற்றைக் கூறுவோம். அவர்கள் ஏறிக்கொண்டு வந்த வண்டி அதன் பிறகு முன் வண்டிகளை எட்டிப் பிடிக்கவுமில்லை, அவைகளைக் காணவுமில்லை. அவர்களது வண்டி இரண்டு நாழிகை நேரம் ஒடிக் கடைசியில் அங்கப்ப நாய்க்கன் தெருவிற் குள் நுழைந்தது. அந்தத் தெரு ஹைகோர்ட்டுக் கெதிரில் இருந்து ஆரம்பித்து சுமார் ஒன்றரை மயில் துரத்திற்கு நீண்டிருந்த தெற்கு - வடக்கான பெருத்த தெரு, அந்தத் தெருவில் உள்ள வீடுகளில்

சிற்சில வீடுகள் தவிர, அந்தத் தெரு முழுதிலும் சாயப்புமார்களே வசித்து வந்தனர். அநேகமாக எல்லா வீடுகளும் இரண்டு சின்று மாடிகளையும் இரண்டு மூன்று கட்டுகளையும் உடையவனாய் மிக விஸ்தாரமான மாளிகைகளாக இருந்தன. அவற்றில் வசிப்ப வரில் பெரும்பாலோரும் தனிகர்களும் வர்த்தகர்க்ளுமாகவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/185&oldid=645965" இலிருந்து மீள்விக்கப்பட்டது