பக்கம்:மதன கல்யாணி-2.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 185

அறிந்து கொள்ளக்கூடாது என்பது அவர்களுடைய எண்ணம் போலிருக்கிறது. நான் அடையாற்றுக்குப் போவதற்கும் அவர் இணங்கவில்லை; கடிதத்தையும் கொடுக்கவில்லை.

ராஜாயி:- அவர்கள் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? நாம் ஒருவருக்கொருவர் சகோதர பாத்தியம் கொண்டாடுவதைக் கூட அவர்கள் தடுக்க நியாயமில்லையே; அவர்களுக்குள் என்ன யோசனையோ நம்முடைய பிறப்பு வளர்ப்பு முதலிய விவரங் களில் எதையும் நாம் அறியக்கூடாதென்று அவர்கள் மறைத்துக் கொண்டு வருகிறது முன்னமே தெரிந்த விஷயம். இனி நம் இருவரையும், ஒருவருக்கொருவர் அற்றுப் போகும்படி செய்ய நினைக்கிறார்கள் போலிருக்கிறது - என்றாள்.

அந்தச் சமயத்தில், கன்னியம்மாள் ஒரு செம்பில் தண்ணிர் கொண்டு வந்து நீட்ட, மோகனரங்கன் முதல் நாளிரவு முற்றிலும் பட்டினி கிடந்தவன் ஆதலால், எழுந்து காப்பி முதலியவற்றைப் பருகியபின், உட்கார்ந்து பேசலாம் என்ற எண்ணங் கொண்டு போய், சற்று தூரத்திலிருந்த ஒரு தாழ்வாரத்தில் கால் கைகளை எல்லாம் அலம்பி சுத்தம் செய்து கொண்டுவர, அதற்குள் வேலைக்காரி சிற்றுண்டிகள் காப்பி முதலியவற்றைக் கொணர்ந்து, ஊஞ்சல் பலகையின் மீது வைத்திருந்தாள். மோகனரங்கன் அவற்றை அருந்திய பிறகு வேலைக்காரியை அழைத்து, பாத்திரங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு போகும்படி செய்துவிட்டு, தனது கை வாய் முதலியவற்றை அலம்பிக் கொண்டு ஊஞ்சற் பலகையிலேயே உட்கார்ந்த வண்ணம் தனது அக்காளிடத்தில் மேலும் சம்பாஷிக்கத் தொடங்கினான்.

அதுகாறும், பக்கத்திலிருந்த ஓர் அறைக்குள் சென்று ஏதோ காரியம் செய்து கொண்டிருந்த ராஜாயி அம்மாள் திரும்பி வந்து, ஒரு பக்கமாகத் தரையில் உட்கார்ந்து கொண்டு மோகனரங்கனைப் பார்த்து, “அப்படியானால், நீ இப்போது என்ன உத்தியோகத்தில் இருக்கிறாய்?” என்றாள். -

மோகன:- மாரமங்கலம் ஜெமீந்தார் பங்களாவில் ஒரு குமாஸ்தா வேலையில் இருந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/189&oldid=645972" இலிருந்து மீள்விக்கப்பட்டது