பக்கம்:மதன கல்யாணி-2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 15

எதிரி பெண்பாலாகவும் இருந்து விட்டால், விஷயத்தை உடைத்துப் பேசுவது பரம சங்கடமாகப் போய்விடுகிறது. நம்முடைய வழக்கும் அம்மாதிரியான வழக்காக இருக்கிறது” என்று நயமாகப் பேசினார்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாள் பதைபதைத்தவளாய் எழுந்து நின்று, “சரி, சரி, உம்மோடு இவ்விதமாக மேலும் சம்பாஷண்ை செய்ய எனக்குக் கொஞ்சமும் இஷ்டமில்லை. இவ்வளவோடு நிறுத்திக்கொள்ளும்” என்று மிகவும் உறுதியாகக் கூறினாள். .

அதைக் கேட்ட கிழவர், “அம்மணி பிரபுக்களுடைய வீண் உருட்டலுக்கும் மிரட்டலுக்கும் பயந்து, நான் கேவலமாகப் பணிந்து போகக்கூடிய மனிதனல்ல என்பதை நீங்கள் தயவு செய்து தெரிந்து கொள்ள வேண்டும். சமஸ்தானாதிபதிகளுடைய போலிப் பிரகாசத்தைக் கண்டு என்னுடைய கண் கூசிப் போகும் என்று நினைக்க வேண்டாம். நட்சத்திரங்கள் தூரப்பார்வைக்கு மகா பிரகாசத்தோடு ஜொலிக்கின்றன. ஆனால், அவைகள் கீழே விழுந்தால், உபயோகமற்ற வெறுங்கல்லுகளாய் இருக்கின்றன. அதைப் போலவே நம்முடைய சமஸ்தானங்களின் சொந்தக்காரர் களான சில்லரைத் தெய்வங்களுடைய யோக்கியதையும் வெளிப் பகட்டே அன்றி வேறல்ல. இப்படிப்பட்ட தெய்வங்களை நான் பூஜிக்கிறவனுமல்ல. அவைகளைக் கண்டு பயப்படுகிறவனுமல்ல” என்று நிதானமாகவும் அழுத்தமாகவும் கூறினார்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாள் நிரம்பவும் அவமானமடைந் தாள். அவளது எண்சாண் உடம்பும் ஒரு சாணாகக் குன்றியது. அவள் மறுபடியும் தனது ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டவ ளாய், “ஐயா! வேண்டும் என்றே என்னைத் துவிப்பதற்காக நீர் இங்கே வந்தீரா? அப்படியானால் சொல்லிவிடும். நான் வாயைத் திறக்காமல் நீர் சொல்லுவதை எல்லாம் கேட்டுக் கொண்டாகிலும் இருக்கிறேன். பார்வைக்கு நீர் மிகவும் மரியாதைப்பட்ட மனிதராகவும் வயதான பெரியவராகவும் இருப்பதால், என்னுடைய வேலைக்காரரைக் கூப்பிட்டு, உம்மை வெளியில் எப்படித் தள்ளச் சொல்லுகிறது என்று யோசிக்கிறேன். இவ்வளவு

ts.s.li-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/19&oldid=645974" இலிருந்து மீள்விக்கப்பட்டது