பக்கம்:மதன கல்யாணி-2.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#36 மதன கல்யாணி

ராஜாபி: இருந்தேன் என்கிறாயே. அப்படியானால் இப்போது அங்கே இல்லையா?

மோகன: நேற்று பகல் வரையில் அங்கே தான் இருந்தேன். அந்த சமஸ்தானத்து எஜமானியம்மாளான கல்யாணியம்மாள் நேற்று பகல் சுமார் நாலரை மணிக்கு என்னை அழைத்து, ஒரு கடிதத்தை கொடுத்து, அதை எடுத்துக் கொண்டு மைலாப்பூரில் உள்ள வக்கீல் ஐயாவிடத்தில் கொண்டு போய்க் கொடுத்து விட்டு வரும்படி சொன்னார்கள். அதை நான் உடனே எடுத்துக் கொண்டு மைலாப்பூருக்குப் போய், முதலியாரிடத்தில் கொடுத்தேன். அதைப் படித்துப் பார்த்த முதலியார் கல்யாணியம்மாளுக்கு ஏதோ பதில் எழுதி அதை வேறோர் ஆளிடத்தில் கொடுத்தனுப்பி விட்டு, என்னைப் பார்த்து, அவர்களுக்கு செங்கல்பட்டிலுள்ள நிலங்களின் மாசூல் இப்போது அறுவடை யாகும் காலம் ஆதலால், அங்கே இருக்கும் இரண்டு குமாஸ்தாக் களுக்கு உதவியாக, இன்னொரு குமாஸ்தா வேண்டும் என்று அவர்களுடைய தம்பி கடிதம் எழுதியிருப்பதாகவும், என்னை உடனே அனுப்பப் போவதாகவும் சொன்னார்கள்; வேலைக் காரனை அழைத்து, பெட்டி வண்டியைப் பூட்டச் செய்து ஏதோ சில கடிதங்களை எழுதிக் கையிலெடுத்துக் கொண்டார்கள்; எனக்கு அது சம்மதமானதா இல்லையா என்பதைக் கூடக் கேட்டறிந்து கொள்ளாமல், என்னையும் வண்டியில் ஏறச் செய்து, எழும்பூர் ஸ்டேஷனுக்கு வந்தார்; அவரே பணத்தைக் கொடுத்து டிக்கெட்டு வாங்கினார்; என்னை அழைத்துக் கொண்டு வந்து ரயிலில் ஏறி உட்காரச் செய்து, டிக்கெட்டையும் ஒரு கடிதத்தையும் கொஞ்சம் பணத்தையும் கொடுத்துவிட்டு, வண்டி புறப்பட்டு ஒடின பிறகு, அவர் திரும்பி வெளியில் போனார். ஆகையால், நான் செங்கல்பட்டுக்கு மாற்றலாகப் போகிற சந்தர்ப்பத்தில், உங்களை எல்லாம் பார்க்க வேண்டும் என்ற தடுக்க முடியாத ஓர் ஆசையினால் இங்கே வந்தேன்.

ராஜாயி:- அப்படியானால் நீ சைதாப்பேட்டையில் இறங்கி, அடையாற்றுக்குப் போனாய் போலிருக்கிறது.

மோகன:- இல்லை, இல்லை. வக்கீல் ஐயா என்னை திடீரென்று அனுப்பியதைப் பற்றி நான் நிரம்பவும் விசனப்பட்டுக் கொண்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/190&oldid=645975" இலிருந்து மீள்விக்கப்பட்டது