பக்கம்:மதன கல்யாணி-2.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 187

என்ன செய்வதென்பதை அறியாமல் பல்லாவரம் வரையில் போய் கேட்டேன். அதற்கு மேல் போக மனம் இசையாமையால், அந்த ஊரில் இறங்கி, ராத்திரி முழுதும் ஸ்டேஷனில் படுத்திருந்து, காலையில் பட்டணம் வரும் வண்டியில் சைதாப்பேட்டைக்கு வந்து, அங்கே இருந்து அடையாற்றுக்குப் போன போது, இந்த சாயப்புவை வழியில் சந்தித்தேன். நல்ல வேளையாக இவர் என்னுடைய அடையாளங் கண்டு கொண்டார். இல்லாவிட்டால், நான் உங்களுடைய இருப்பிடத்தை இவ்வளவு சுலபத்தில் கண்டிருக்க முடியாது.

ராஜாயி:- (சிறிது யோசனை செய்து) மாரமங்கலம் ஜெமீந்தாரிணி அம்மாள் அடிக்கடி உன்னிடத்தில் கடிதம் கொடுத்து வக்கீல் ஐயா வீட்டுக்கு அனுப்புகிற வழக்கம் உண்டோ?

மோகன:- இல்லை, இல்லை. நான் அங்கே வேலைக்குப் போய் சுமார் ஒரு வருஷ காலமாகிறது. அவர்கள் என்னிடத்தில் கடிதம் கொடுத்து வக்கீல் ஐயாவிடத்துக்கு அனுப்பியது இதுதான் முதல்

.-l.

ராஜாயி:- (முன்னிலும் அதிகம் ஆழ்ந்து யோசனை செய்து) அப்படியானால், இதில் ஏதோ சூது இருக்கிறது. வக்கீல் ஐயா நம்முடைய விஷயங்களை எல்லாம் இப்படித்தான் பூடகமாகச் செய்து வருகிறார். மாரமங்கலம் ஜெமீந்தாரிணியம்மாளுக்கு உன் மேல் ஏதாகிலும் கோபம் உண்டாகும்படி நடந்து கொண்டாயோ?

மோகன:- (சிறிது தயங்கி) அப்படி ஒன்றுமில்லை.

ராஜாயி:- வக்கீல் ஐயா அவர்களுடைய தம்பிக்கு எழுதிய

{"J; - o H கடிதம் எங்கே? அதை எடு பார்க்கலாம் - என்றாள்.

t

அதைக் கேட்ட மோகனரங்கன், தனது சட்டைப்பைக்குள் கிடந்த ஒரு கடிதத்தை எடுத்துத் தனது அக்காளிடத்தில் கொடுக்க, அவள் அதை வாங்கி, தண்ணிரை அதன் வாயில் தடவி ஊற வைத்து அதன் மூடியைத் திறந்து, உள்ளே இருந்த கடிதத்தை எடுத்துப் பிரித்து அதைப் படித்தாள். அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது:- -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/191&oldid=645977" இலிருந்து மீள்விக்கப்பட்டது