பக்கம்:மதன கல்யாணி-2.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 மதன கல்யாணி

சிரஞ்சீவி சோணாசலத்துக்கு அனேக ஆசீர்வாதம்; உபய கூேடிமம். -

இதைக் கொண்டு வரும் மோகனரங்கன் என்ற பையன், இது வரையில், மாரமங்கலத்தாரின் அரண்மனையில் குமாஸ்தாவாக இருந்தவன். அவன் இரண்டு மாசகாலம் வரையில் அங்கே இருந்து நம்முடைய குமாஸ்தாக்களுக்கு உதவியாக இருக்கட்டும். இவனுக்கு ஒட்டலில் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்து, இவன் இருப்பதற்கு, பிரத்தியேகமான ஒர் இடம் ஏற்படுத்திக் கொடு. இவன் நம்முடைய வீட்டில் உள்ள பெண்களோடு பழகும்படி விடவேண்டாம். இவனைப் பற்றி விரிவான ஒரு கடிதம் எழுதி இன்றைய தபாலில் போட்டிருக்கிறேன். அதைப் பார்த்து அதன்படி நடந்துகொள்.

இப்படிக்கு சிவஞானம்.

-என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படித்துக் காட்டிய ராஜாயி அம்மாள் உடனே மோகனரங்கனைப் பார்த்து, “சரி; என்னுடைய சந்தேகம் நிச்சயமாகிவிட்டது. அவர்களுடைய தம்பி, இன்னொரு குமாஸ்தா வேண்டும் என்று கேட்டதற்கு இது மறுமொழியாக எழுதப்பட்டதாகத் தோன்றவில்லை. கல்யாணியம்மாளுடைய கடிதத்தின் மேல், அவர்களே உன்னை அனுப்பி இருக்க வேண்டும் என்று நான் சந்தேகப்படுகிறேன். நீ உண்மையை மறைக்காமல் என்னிடத்தில் சொல்லிவிடு. நான் அக்காளாயிற்றே என்று வெட்கப்படாதே” என்று அன்போடு நயமாக வற்புறுத்திக் கேட்க, மோகனரங்கன் மிகுந்த லஜ்ஜை அடைந்தவனாக சிறிது நேரம் தயங்கி பின, “சரி; இப்போது இந்தக் கடிதத்தைப் பார்த்த பிறகு, எனக்கும் அதே சந்தேகம் உண்டாகிறது. இந்த மாரமங்கலம் ஜெமீந்தாரிணியம்மாளுக்கு துரைஸானியம்மாள் என்றும் கோமள வல்லியம்மாள் என்றும் இரண்டு அழகான பெண்கள் இருக்கிறார் கள். அவர்களில் மூத்தவளான துரைஸானியம்மாளுக்கு என்னிடத் தில் நிரம்பவும் பிரியம்; அவள் என்னைப் பார்த்த முதல் அடிக்கடி என்னைத் தனியாக அழைத்து வைத்துக் கொண்டு நம்முடைய குடும்ப விவரங்களை எல்லாம் கேட்பதுண்டு. சென்ற இரண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/192&oldid=645979" இலிருந்து மீள்விக்கப்பட்டது