பக்கம்:மதன கல்யாணி-2.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் i39

நாளாக அவள் ஏன்னை அடிக்கடி அழைத்துப் பிரியமாகப் பேசி, என்னையே கட்டிக்கொள்ள அவள் பிரியப்படுவதாகச் சொல்லி வந்தாள். நேற்று பகலில் அவள் என்னை அவளுடைய அந்தப் புரத்துக்கு வரச்சொன்னாள். நான் அங்கே போயிருந்தேன்; இங்கே தனியாக ஒரு வீடு பார்த்து வைக்க வேண்டும் என்றும், இன்று ராத்திரிக்குள் அவளும் நானும் ரகசியமாக பங்களவை விட்டு, அந்த இடத்துக்குப் போய்விடுவதென்றும் முடிவு கட்டினாள். நான் அவள் சொன்னதை மீறமாட்டாமல், அதை ஒப்புக் கொண்டிருந்ததற்கு, ஒரு போக்காக, அவள் தனக்குத் தலை நோவாக இருப்பதால் கதவுகளைச் சாத்திவிட்டுத் தனியாக இருப்பதாக அவளுடைய தங்கையிடத்தில் சொல்லிவிட்டு வந்திருந்தாள். நாங்கள் இரண்டு பேரும் உள்ளே இருந்த காலத்தில், ஜெமீந்தாரிணியம்மாள் வெளியில் வந்து கதவைத் தட்டி, மருந்து போட வந்திருப்பதாகச் சொன்னார்கள். இவள் தனக்கு அநேகமாக குணமுண்டாய் விட்டதென்றும் தன்னால் எழுந்து வந்து கதவைத் திறக்கக்கூட வில்லை என்றும் சொல்ல, அவர்கள் போய் விட்டார்கள். அந்தப் பெண் உடனே என்னை வெளியில் அனுப்பி விட்டாள். நான் கச்சேரி மண்டபத்திற்குப் போனேன். அங்கே தயாராக நின்ற ஒரு வேலைக்காரி, என்னை எஜமானி யம்மாள் அழைப்பதாகக் கூற, நான் உடனே போய் ஜெமீந் தாரிணியம்மாளுக்கெதிரில் நின்றேன். அவர்கள் உடனே ஒரு கடிதத்தைக் கொடுத்து வக்கீல் ஐயா வீட்டுக்கு அனுப்பினார்கள்” என்றான்.

அந்த விவரத்தைக் கேட்ட ராஜாயி அம்மாள் மகிழ்ச்சியோடு புன்னகை செய்து, “சரி; இப்போது தான் உண்மை நன்றாக விளங்குகிறது. நீ துரைஸானியம்மாளிடத்தில் நட்பாக இருக்கிறாய் என்பதைக் கண்டுகொண்டே அந்த அம்மாள் உன்னை உடனே வேறு எங்கேயாவது அனுப்பிவிடும்படி கடிதம் எழுதி வக்கீல் ஐயாவுக்கு அனுப்பி இருக்கிறார்கள் என்பது நிச்சயமாகத் தெரி கிறது. அதிருக்கட்டும்; நான் முதலில் ஒரு கேள்வி கேட்கிறேன்; அதற்கு நீ வெட்கப்படாமல் உடனே பதில் சொல்ல வேண்டும். அவள் உன்னிடத்தில் மோகம் கொண்டிருக்கிறாள் என்பது நன்றாகத் தெரிகிறது; உனக்கும் அவளைக் கட்டிக்கொள்ளப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/193&oldid=645981" இலிருந்து மீள்விக்கப்பட்டது