பக்கம்:மதன கல்யாணி-2.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49s; :மதன கல்யாணி

பிரியந்தானா? அதை மாத்திரம் நீ சொல்லிவிடு” என்றாள். மோகன - ன் நாணிக் கோணிக் கீழே குனிந்து ஐந்து நிமிஷநேரம் வரையில் மெளனம் சாதித்து, “எனக்கும் பிரியமாகத்தான் இருக்கிறது” என்றான். “அப்படியானால், நாளைய தினம் ராத்திரி சரியாக ஒன்பது மணிக்கு அந்தப் பெண் இங்கே வந்து சேருவாள்; உடனே உங்கள் இருவருக்கும் தாலிகட்டி வைக்கிறேன்; அதைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம். இனிமேல் நீ வேறு



--

எவரிடத்திலும் வேலைக்கு போக வேண்டாம்” என்று யாரோ ஒரு மனிதர் மெத்தைப்படியில் நின்று கூறிய வண்ணம் அவர்கள் இருந்த கூடத்திற்கு வந்தார். அந்த மனிதர் தனது புருஷரான சுந்தரம் பிள்ளை என்று கண்டவுடனே, ராஜாயி அம்மாள் புன்னகை தவழ்ந்த முகத்தோடு எழுந்து நின்று, “நாங்கள் ரகசியமான சங்கதியைப் பேசிக் கொண்டிருக்கையில், உங்களை யார் இப்படி மறைந்திருந்து கேட்கச் சொன்னது?” என்று வேடிக்கை போலக் கொஞ்சலாகக் கேட்க, சுந்தரம் பிள்ளையும் மகிழ்ச்சியோடு புன்னகை செய்து, “நான் மெத்தைப் படியில் ஏறிய போது நீங்கள் பேசியதைக் கேட்டு சுவாரஸ்யமாக நீங்கள் பேசுவதை நான் வந்து தடுக்கக்கூடாதென்று அப்படியே நின்று கொண்டிருந்தேன். நீங்கள் பேசிய சங்கதிகள் எல்லாம் எனக்கும் தெரியவேண்டியவை ஆகையால் பாதகமில்லை. ஏனப்பா! மோகனரங்கம்! உன்னுடைய அக்காள் கோபித்துக் கொள்ளு கிறதைப் போல நீயும் என் மேல் கோபித்துக் கொள்ளப் போகிறாயா?” என்று பரிகாசமாகப் பேசிய வண்ணம், மோகனரங்கனிருந்த இடத்திற்கருகில் வந்து, ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார். திடீரென்று தனது அத்தான் தோன்றியதையும், அவர் தனது விஷயங்களை எல்லாம் அறிந்து கொண்டதையும் கண்ட மோகனரங்கன் பெரிதும் குழப்பம் அடைந்தவனாய், மகிழ்ச்சியும் கிலேசமும் ஒன்று கூடிய முகத் தோற்றத்தோடு அவரைப் பார்த்துப் புன்னகை செய்தான். உடனே சுந்தரம் பிள்ளை அவனை நோக்கி, “நான் கீழே வந்தவுடனே, நம்முடைய அப்துல்கணி ராவுத்தர் உன்னை அழைத்துக் கொண்டு வந்திருப்பதாகச் சொன்னார். அதைக் கேட்ட உடனே நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/194&oldid=645983" இலிருந்து மீள்விக்கப்பட்டது