பக்கம்:மதன கல்யாணி-2.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 191

ஆனந்த பரவசம் அடைந்து, மேலே ஏறி வந்தேன். வந்தவன் மெத்தைப்படியில் நின்றே எல்லா விவரங் களையும் அறிந்தேன்” என்று கூறிய வண்ணம் “கன்னியம்மா கன்னியம்மா” என்று வேலைக்காரியை அழைத்து, தனது கைப் பெட்டியை எடுத்து வரும்படி கூற, அவள் அவ்வாறே ஒரு பெட்டியைக் கொணர்ந்து வைத்துச் சென்றாள். அவர் அதைத் திறந்து, அதற்குள்ளிருந்த காகிதம் மைக்கூடு இறகு முதலியவற்றை எடுத்து வெளியில் வைத்துக் கொண்டு ஏதோ ஒரு கடிதம் எழுதத் துவக்கினார்.

அப்போது, மோகனரங்கன் தனது கடைக்கண் பார்வையை சுந்தரம் பிள்ளையின் மீது செலுத்தினான். அவர் போலிஸ் ஹெட் கான்ஸ்டபில் வேலையில் இருந்ததைவிட, அப்போது மிகுந்த செழுமையும் மேனியும் அழகும் பெற்று, நல்ல ஸ்திதியில் இருக்கிறார் என்பது நன்றாகத் தெரிந்தது. அவருக்கு உண்மையில் சுமார் முப்பது வயதாயிருந்ததாயினும், அவர் மீசை இல்லாமல் இருந்தமையால், அவரது முகம் மிகுந்த இளமையைக் காட்டியது. ஆனால், அவருடைய குரல் மாத்திரம் அவனுக்கு அதிகப் பழ்க்க மானதாகத் தோன்றியது. தான் அவரை சமீப காலத்தில் எந்த இடத்திலும் பார்க்கவில்லையே. அப்படி இருக்க, அவரது குரல் அவ்வளவு பழக்கமானதாக இருக்கிறதே என்று அவன் நினைத்து நினைத்துப் பார்த்தான். அவரை ஒரு வருஷ காலத்திற்குள் தான் எவ்விடத்திலும் பார்த்ததாகத் தோன்றவில்லை. ஆனால், அவன் அன்று காலையில் சந்தித்த அப்துல்கணி ராவுத்தருடைய குரலுக்கும், சுந்தரம் பிள்ளையினுடைய குரலுக்கும் சிறிது ஒற்றுமை இருப்பதாக, அவனது மனதில் ஒரு நினைவு உண்டா யிற்று. அதனாலே தான் சுந்தரம் பிள்ளையின் குரல் தனக்குப் பழக்கமான குரலாக இருக்கிறதென்று மோகனரங்கன் நினைத்து ஒருவாறு திருப்தி அடைந்தவனாக இருக்க, அதற்குள் தமது கடிதத்தை எழுதி முடித்த சுந்தரம் பிள்ளை அதை மோகன ரங்கனிடத்தில் கொடுத்து, ராஜாயின் காதில் விழும்படி படிக்கச் சொல்ல மோகனரங்கன் அதைப் படித்தான். அந்தக் கடிதம் அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது:

2.க.:1-83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/195&oldid=645984" இலிருந்து மீள்விக்கப்பட்டது