பக்கம்:மதன கல்யாணி-2.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 மதன கல்யாணி

தூரம் துணிந்து பேசியது நீரல்லாமல் வேறே எவனாய் இருந்தாலும் இந்நேரம் அவன் படுகிறபாடு தெரிந்திருக்கும்” என்று மிகவும் ஆடம்பரமாகக் கூறினாள்.

அதைக் கேட்ட பசவண்ண செட்டியார் மிகுந்த அருவருப்போடு கலகலவென்று நகைத்து, “ஓகோ அப்படியும் செய்வீர்களோ ஒரு நாளுமில்லை. நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நிஜம் என்பது உங்களுடைய உள்ளத்துக்கே நன்றாகத் தெரியும் ஆகையால் அப்படிப்பட்ட முழு அக்கிரமம் செய்ய உங்களுடைய மனம் இடங்கொடுக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. உங்களுடைய இருதயத்தில் கையை வைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கல்யாணியம்மாளது முகத்தை உற்று நோக்கி முறைப்பாகப் பார்க்கவே, உண்மையில் குற்றவாளியான கல்யாணியம்மாள் நிமிர்ந்து பார்க்கும் துணிவில்லாதவளாய், தனது முகத்தைக் கீழே கவிழ்த்துக் கொண்டாள். அதைக் கண்ட கிழவர் மேலும் பேசத் தொடங்கி, “அம்மணி நான் ஒரு சிறிய திருஷ்டாந்தம் சொல்லுகிறேன். தயவு செய்து பொறுமையாக அதைக் கேளுங்கள். விஷயம் இன்னதென்பது உங்களுக்கே நன்றாக விளங்கிவிடும். ஒரு பெருத்த சமஸ்தானத்துக்கு அதிபதியான ஜெமீந்தாரிணியம்மாள், இளம்பிராயத்திலேயே விதவையாய் இருந்தும், கற்பில் அருந்ததி என்று பெயரெடுத்து, ஊரார் எல்லாரும் தன்னை ஆகாசம் வரையில் புகழும்படி அவ்வளவு யோக்கியதையாக இதுவரையில் நடந்து, மகா உன்னத பதவியிலும் பெருமையிலும் இருந்து வந்த அந்தச் சீமாட்டி என்ன செய்தாள் என்றால், தன்னுடைய பங்களாவுக்கு வந்து கொண்டிருந்த ஒரு தொழிலாளியான எளிய பையனிடத்தில் தப்பான எண்ணங் கொண்டுவிட்டாள். ஒரு நாள் அந்தப் பையன் தனக்கு வேறோரிடத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தினால் மனம் குழம்பி, ஞாபகப் பிசகாக வழிதவறி, அந்தச் சீமாட்டியின் அந்தப்புரத்துக்குள் நுழைந்து விட்டான். நுழைந்தவன் தன்னுடைய பிழையை அறிந்து மிகவும் வருந்தி, அதன் பொருட்டு அந்த அம்மாளிடத்தில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வெளியில் போக முயலுகையில், அந்த ஜெமீந்தாரிணி அவனை உருக்கமாக அழைத்து யோககூேடிமம் விசாரித்து, அவனுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/20&oldid=645993" இலிருந்து மீள்விக்கப்பட்டது