பக்கம்:மதன கல்யாணி-2.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 மதன கல்யாணி

வேண்டியவைகளை எல்லாம் எடுத்துக் கொண்டிருந்த போது, ஒரு பெட்டியினடியில் காகிதத்தால் மிகவும் ஜாக்கிரதையாகக் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு துணி மூட்டையைக் கண்ட வுடனே, அதைப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் என் மனதில் உண்டாயிற்று. நான் அதை உடனே எடுத்துப் பிரித்துப் பார்க்கிறேன்! ஆகா! அதை என்னவென்று சொல்லுவேன்! நான் என்னுடைய கண்களையே நம்பவில்லை. அந்த மூட்டைக்குள் வெள்ளைக்கார துரைஸானி அணிந்து கொள்ளக்கூடிய உடைகள் ஒரு ஜோடிப்பு இருந்தன. நான் ஒவ்வொன்றாக எடுத்துப் பிரித்துப் பார்த்தேன். பார்க்கு பேர் (Park Fair) தினத்தன்று, ரகசியமாகவும், பெயரை மறைத்தும் உனக்குக் கடிதம் எழுதி, அதன்படி வந்து உன்னோடு பேசிக் கொண்டிருந்த அந்தப் பெண் அணிந்திருந்த உடைகள் எல்லாம் அப்படியே இருந்தன. அந்த உடைகள் எல்லாம் அம்மாளுடைய பெட்டிக்குள் இருக்க வேண்டிய காரணம் என்ன என்பதை நான் நேற்று முழுதும் யோசித்து யோசித்துப் பார்த்தேன். ஒன்றும் விளங்கவில்லை. ஆனால், அந்த விஷயத்தில் என்னுடைய அம்மாளும் எந்த விதத்திலோ சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது நிச்சயமாகத் தெரிகிற்து. அவர்கள் என் விஷயத்தில் இதுவரையில் எவ்வளவோ கொடுமையாக நடந்திருந்தாலும், அவர்களைக் காட்டிக் கொடுக்கக்கூடாது என்ற தயாள நினைவினால், நான், அந்த உடைகளைக் கண்ட விவரத்தை எல்லாம் வேறே எவரிடத்திலும் சொல்லாமல் இதுவரையில் மறைத்து வைத்திருந்தேன். அவர்கள் பத்திர விஷயத்தில் செய்ய நினைத்திருக்கும் தீங்கைப் பற்றி இன்று காலையில் கேள்விப்பட்ட பிறகு, அவர்களுடைய எண்ணத்தில் மண்ணைப் போடுவதோடு, இன்னமும் என்னால் ஈன்ற தீங்கை அவர்களுக்கு நான் உடனே செய்து தீரவேண்டும் என்ற ஒரு கொதிப்பும் என் மனசில் உண்டாகி விட்டது. ஆகையால் நான் அந்த வெள்ளைக்கார உடைகளை எல்லாம் மூட்டையாகக் கட்டி, இந்த வேலைக்காரியிடம் கொடுத்து உன்னிடத்துக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறேன். உன் மனசை மயக்கிய போலி வெள்ளைக் காரி யார் எனபதை அறியமாட்டாமல் நீ தவித்திருப்பவன் ஆகையால், இந்த உடைகளின் உதவியாலும், உனக்கு வந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/202&oldid=645998" இலிருந்து மீள்விக்கப்பட்டது