பக்கம்:மதன கல்யாணி-2.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் $99

இரண்டு கடிதங்களைக் கொண்டும், இந்த உடைகள் எங்களுடைய பங்களாவில் இருந்ததென்ற விஷயத்தைக் கொண்டும், அந்த ஸ்திரியார் என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த விஷயத்தினால், என்னுடைய அம்மாளுக்கு எவ்வித இழிவும் அவமானமும் நேருவதானாலும் அது எனக்குச் சம்மதமானதே. இது சம்பந்தமாக நீ தக்க முயற்சி செய்து, என்னுடைய அம்மாளை நன்றாக அவமானப்படுத்தி, ஊரார் சிரிக்கும்படி செய்தால், என் மனம் நிரம்பவும் குளிரும்.

இது நிற்க, இன்னொரு சந்தோஷ சங்கதி என்னவென்றால், நான் உன்னைப் பற்றி பாலாம்பாளிடத்தில் மிகவும் புகழ்ச்சியாகப் பேசி இருக்கிறேன். நீ என்னுடைய ஆருயிர் நண்பன் என்றும், உன்னை மாத்திரம் நான் அடிக்கடி இந்த பங்களாவுக்கு அழைத்துக் கொண்டு வருவதற்கு அவள் ஆட்சேபனை சொல்லாமலிருக்க வேண்டும் என்றும் சொன்னேன்; அவள் அதற்கு முழுமனதோடு சம்மதித்து விட்டாள். ஆகையால் நீ எந்த நேரத்திலும், இங்கே வந்து எங்களோடு சந்தோஷமாக இருந்து விட்டுப் போகலாம். நான் இந்த இடத்தைவிட்டு, உன்னுடைய பங்களாவுக்கு முன் போல அடிக்கடி வர செளகரியப்படாது. ஆகையால், நீதான் வந்து போய்க் கொண்டிருக்க வேண்டும். மோகனாங்கி எங்கே இருக்கிறாள் என்ற விஷயத்தை நான் இப்போது பாலாம்பா ளிடத்தில் கேட்டால், இவள் என் மேல் ஏதாவது சந்தேகங் கொண்டு விடுவாளோ என்கிற பயம் என் மனசிலிருக்கிறதாகை யால், நான் இவளிடத்தில் அதைப்பற்றி கேட்கத் தயங்குகிறேன். நீ இங்கே வந்து இரண்டொரு நாள் பழகிய பிறகு அந்த விவரம் உனக்குத் தேவை என்று சொல்லி இவளிடத்தில் இருந்து உண்மையை சுலபத்தில் கிரகித்து விடலாம்; ஆகையால் அந்த விஷயத்தில் உனக்கு இனி எவ்விதமான கவலையும் வேண்டிய

வேறே விசேஷம் ஒன்றுமில்லை.

இங்ஙனம், ஆருயிர் நண்பன், மாரமங்கலம்-துரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/203&oldid=646000" இலிருந்து மீள்விக்கப்பட்டது