பக்கம்:மதன கல்யாணி-2.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 203

கழுத்துப் பக்கத்தில் காணப்பட்ட விலாசத்தைக் கவனித்துப் பார்த்தவுடனே, சற்று துரத்தில் உட்கார்ந்திருந்த ஒரு குமாஸ்தாவை அழைத்து, அவரிடத்தில் அந்த மார்பங்கியைக் கொடுத்து, அது யாருக்கு விற்கப்பட்டதென்ற விவரத்தை அறிந்து வரும்படி கூற, அவர் உடனே தமது மேஜைக்குப் போய், அங்கே வைக்கப் பட்டிருந்த கணக்குப் புஸ்தகங்களைப் பரிசோதனை செய்து வந்து, அந்த ஜோடிப்பு உடைகள் தேனாம்பேட்டையில் உள்ள மாரமங்கலம் ஜெமீந்தாரிணி அம்மாளுக்கு வேண்டும் என்று அந்த அம்மாளுடைய குமாஸ்தா ஒருவர் வந்து, அளவுகள் கொடுத்து, முந்திய வாரத்தில் வாங்கிக் கொண்டு போனதாகச் சொன்னார்; அதைக் கேட்ட துரைராஜா புன்னகையும், சந்தோஷமும் அரும்பிய முகத்தோடு, அந்த குமாஸ்தாவை நோக்கி, “ஒகோ! அப்படியா? அவர்கள் எங்களுடைய நெருங்கிய பந்துக்கள்தான்; நல்ல வேளையாக, இது என்னிடத்தில் அகப்பட்டதே; இதை வாங்கிக் கொண்டு போன குமாஸ்தாவின் பெயர் என்ன வென்பது தெரிகிறதா?” என்று நயமாகக் கேட்க, அந்த குமாஸ்தா, “தெரியவில்லை; அவர் எஜமானியம்மாளுடைய எழுத்து மூலமான உத்தரவைக் கொடுத்தார்; அவற்றின் விலை 200-ரூபாய் ஆகும் என்றோம்; அவர் உடனே பணத்தைக் கொடுத்து வாங்கிக் கொண்டு போனார். அவருடைய பெயரைக் கேட்க வேண்டிய சந்தர்ப்பமே ஏற்படவில்லை” என்றார்; அதைக் கேட்ட துரைராஜா, “சரி; பரவாயில்லை. அவர் யாராய் இருந்தால் என்ன; இவைகள் சொந்தக்காரரிடத்தில் சேர வேண்டியதொன்றே முக்கியமானது. மானேஜர்வாள்! நான் உத்தரவு வாங்கிக் கொள்ளுகிறேன். சிரமம் கொடுத்ததற்கு மன்னிக்க வேண்டும்; சலாம்” என்று நயமாகவும் நன்றியறிதலோடும் கூறிய வண்ணம் நாற்காலியை விட்டு எழுந்திருக்க, மானேஜரும் அவனுக்கு உபசார வார்த்தைகள் கூறி விடை கொடுத்தனுப்பினார்.

அங்கே இருந்து புறப்பட்ட துரைராஜா வெளியிலே வந்து, தனது ஸாரட்டின் மேலேறி உட்கார்ந்து கொண்டு, தேனாம்பேட் டையில் உள்ள மாரமங்கலத்தாரது பங்களாவிற்கு ஒட்டும்படி உத்தரவு செய்தான்; அவ்வாறே வண்டி அரை நாழிகை நேரத்தில் தேனாம்பேட்டைக்குப் போய், மாரமங்கலத்தாரது பங்களாவின் வாசலில் நின்றது; உடனே கீழே இறங்கிய துரைராஜா உடைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/207&oldid=646007" இலிருந்து மீள்விக்கப்பட்டது