பக்கம்:மதன கல்யாணி-2.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் .. 2O7

உடனே கல்யாணியம்மாள் சிறிது தயங்கி தனது வேலைக் காரியைக் கூப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை விட்டவளாய் திரும்பவும் தனது ஆசனத்தில் உட்கார்ந்து அருவருப்பான பார்வையாக அவனை நோக்கி, “நீ சொல்வதெல்லாம் ஆச்சரிய மாக இருக்கிறதே! முதல் பரிட்சை என்கிறாய் இரண்டாவது பரிட்சை என்கிறாய்! சன்மானம் என்கிறாய்! இதெல்லாம் என்ன என்பது விளங்கவில்லையே! நீ இப்போது எங்கே இருந்து வருகிறாய்? நீ இப்படி மாறி இருக்கிறாய் என்பது மீனாகூஜியம் மாளுக்குத் தெரியுமா?” என்றாள்.

அதைக் கேட்ட துரைராஜா அருவருப்போடு கலகலவென நகைத்து, “நானா மாறிப் போய் இருக்கின்றேன் துரையம்மாள் தான் கல்யாணியம்மாளாக மாறிப்போய் விட்டாள். அவளுடைய கரைகடந்த காதலெல்லாம் கபடநாடக வேஷமாகவும், கனவில் கண்ட சுகம் போலவும் மாறிப் போயிருக்கிறது. துரையம்மாள் சொன்ன வார்த்தைகள் எல்லாம், நாடகத்தில் வந்து நடித்துப் பேசும் ஸ்திரீ வேஷக்காரியின் பேச்சுகளாக முடிந்து விட்டன. இன்னார் இவ்வளவு கேவலமாக நடந்து கொண்டார்கள் என்றால், அதை எவரும் நம்பவே மாட்டார்கள். என் மனசுக்கும் அந்த விஷயம், கனவோ நினைவோ என்றுதான் இன்னமும் இருக்கிறது” என்று குத்தலாகப் பேசினான். அதைக் கேட்ட கல்யாணியம்மாள் முன்னிலும் அதிகரித்த வியப்பும் அருவருப்பும் அடைந்தவள் போலக் காட்டி, அவனது விஷயத்தில் சிறிதளவு இரக்கங் கொண்டு பேசுபவள் போல நடித்து, “அடாடா என்ன விபரீதம் இது! நீ இன்னம் இரண்டொரு நாள் வீட்டுக்குள்ளேயே படுத்திருந்து விட்டு, மனசு சரிப்பட்டவுடனே வெளியே வரக்கூடாதா மீனாகஷியம்மாளும் உன்னை கவனிக்காமல் இப்படி விட்டுவிட்டார்களே! எனக்கு மிகவும் அவசரமான ஜோலிகள் எத்தனையோ இருக்கையில், உன்னோடு வீணாக வார்த்தையை வளர்க்க நேரம் இல்லை. உன்னை என்னுடைய பெட்டி வண்டியில் வைத்து உங்களுடைய ஜாகையில் கொண்டு போய் விடும்படி ஏற்பாடு செய்கிறேன். போய்ப் பேசாமல் படுத்துக் கொள். நேற்று ராத்திரி அந்த வீணை வித்துவானுக்கு உன்னால் ஏற்பட்ட விபத்தினாலேதான், உன்னுடைய புத்தி இப்படித் தடுமாறிப் போயிருக்கிறது” என்று கூறினாள். in.5, H-14 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/211&oldid=646015" இலிருந்து மீள்விக்கப்பட்டது